உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


மாக இருக்கும் போதே ஒருவிதமாகக் கரை ஏறுக. கறை மாறுக; விடுதலை பெறுக; இன்பக் கேளிக்கைகளில் ஆழ்ந்து அழிந்து போகாதே.

கடமைகள் காத்துக் கிடக்கின்றன. உடமைகளை இப்பொழுது விடமுடியாது. பெரியவனுக்கு மணம் முடித்தேன்; மகளுக்கு மாப்பிள்ளை; பேரனுக்கு புதுப் பள்ளி; வீடுகட்டியாக வேண்டும் எல்லாம் அரை குறை யாக இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியவை பாக்கிகள் நிறைய இருக்கு. எப்படி இதனை விட்டுவிடமுடியும்? பந்த பாசங்கள் வாழ்க்கையின் நேசங்கள். அறம். துறவு, கருணை, அருள் இவை எல்லாம் தள்ளிப் போடுகிறான். "என் தாய்க்கு நான் கொள்ளிப் போடவேண்டி இருக்கிறது" என்று சாக்குப் போக்குக் கூறுகிறான். இவன் செய்கை எப்படி இருக்கிறது?

கடலிலே ஒருவன் முழுகி நீராடச் சென்றானாம். "அலைகள் ஒயவில்லை; அலைகள் அடங்கட்டும், நீரில் இறங்குகிறேன்" என்றானாம். அலையும் ஒயப் போவது இல்லை. இவன் நீரில் இறங்கப் போவதும் இல்லை. இல்லில் அகப்பட்டுக் குடும்பச் சுமையை விடமுடியாது. கடமைகளும் தீராது. இவன் அறவாழ்வில் அடிஎடுத்து வைக்க முடியாது. இவர்கள் எல்லாம் சமுசார பந்தத்தி னின்று விடுபட முடியாது.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவு இலார்' என்பர் வள்ளுவர். கல்வி நூல் பல கற்றவர். உயர்குடியில் பிறந்தவர் தவஒழுக்கம் கொண்டவர், அறிவு முதிர்ச்சி உடையவர் இவ்வளவு இருந்தும் நடைமுறை உலகை அறிந்து வாழ வழி அறியமாட்டார்.