பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 நட்பியல் ஒரே நீர்நிலையில் தோன்றி ஒன்ருக நீண்டு வளர்ந்த போதும், மலர்ந்த நேர்த்தியான குவளை மலரை ஆம்பல் மலர் ஒவ்வாது. அதுபோல, பெருந்தன்மையாளரின் நட்பைப் பெறினும், பெருந்தன்மை யில்லாத அற்பரின் செயல்கள் மாறுபடும். 236 ஒரளவு வளர்ச்சி யடைந்த சிறு குரங்கு, உணவுப் பொருளுடன் தன் எதிர்ப்பட்ட தந்தைக் குரங்கைக் கண்டதும், பயற்றங்காய் நெற்றைக் கண்டாற்போன்ற தன் கைவிரலால் தந்தையின் கையைக் குத்தி விரித்திட்டு அதிலுள்ள உணவைப் பறித்து உண்ணும் மலே நாடனே ! ஒற்றுமை இல்லாதாரின் நட்பு இனிக்காது. 237 நண்பனுக்கு நெருக்கடி நேர்ந்தபோது விரைந்து சென்று எனது அரிய உயிரை அந்த ஒப்பற்ற ஒரே ஒரு நண்பன் கையில் ஒப்படைக்கேனே யானுல், தன் நண்பன் மணந்து கொண்ட டினேவியைக் கற்பழித்தவன் செல்லும் நரகத் திற்கு, நீண்ட புகழுடைய இவ்வுலகத்தார் எள்ளி நகை யாடும்படி யானும் செல்வேனுக ! - 238 தேன் உண்டாகும் நல்ல மலை நாடனே நயம் அறிந்த வரின் நட்பை விட்டு அற்ப அறிவினருடன் கொண்ட நட்பு, ப்சு நெய் இருந்த பர்ண்டத்தில் அதை நீக்கிவிட்டு வேப்ப நெய்யைப் பெய்து வைத்தது போன்றதாகும். 239 உருவத்தில் அழகாய் அமைந்திருப்பவனிடம் ஊருக்கு உதவும் பண்பு இல்லாமை, அருந்துதற்கு ஏற்ற அளவு அமைந்துள்ள பாலில் மிகுதியாய் நீர் கலந்தாற்போலும் ! தெளிந்த அறிவாளர் தியவருடன் சேர்ந்து மாறுதல், நாகப்பாம்பு பெட்டைவிரியன் பாம்போடு உடல் உறவாடி ற்ைபோலும் ! -