உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 இன்பவியல் பருத்த அடியையுடையபுன்னைமரங்கள் நிறைந்தகுளிர்ந்த கடற்கரை நாடனே! யாரிடத்தும் நல்ல நட்பு கொண்டு நிலைத்துத் தங்கும் மனமுடையவர், நண்பரை விட் டு ப் பிரிதலும் பிறகு சேர்தலும்செய்வரோ? (மாட்டார்.) எனவே, கண்டபடி கலந்து பழகாதிருத்தல் நல்லது. 246 எதையும் விளங்க ஆராய்ந்துணரும் அறிவுடையாரைச் சேரின் இன்பமும் சேரும். விளங்க உணரும் உணர்ச்சி யில்லாரோடு தவறிச் சேர்ந்து பழகின், அவரை வி ட் டு நீங்கும்போது துன்பமும் விட்டு நீங்கும். 247 தன்னை நல்லநிலைமையில் நிறுத்திவைப்பவனும்,தன்னை நன்னிலையிலிருந்து கலங்கச்செய்து தாழ்மைப்படுத்துபவ னும், இருக்கும் நிலையைக்காட்டிலும் மேலும் மேலும் உயரச் செய்து தன்னை நிலை நிறுத்துபவனும், தன்னை யாவர்க்கும் தலைவனுகச் செய்பவனும் தானேதான் (பிறன் அல்லன்)248 அரிய இயல்புடைய அலைகள் ஆரவாரித்து ஒலிக்கும் குளிர்ந்த கடற்கரை நாடனே! ஒரு செயல் முடிக்கும் காரணத்தால், கல்லாதவர் பின்னே பெருமைக்குரிய கற் ருேர் செல்லுதலும் அறியாமை அன்று; அஃது அறிவு உடைமையே! 249 செயலும் உருவாகச்செய்துமுடித்து, இன்பமும் துய்த்து, அறமும் தகுந்தவர்க்குச் செய்து, இப்படியாக ஒருசேர மூன்றும் முட்டுப்பாடு இல்லாமல் முடியுமானல், அந் நிலைமை, (வெளிநாட்டு வாணிகத்திற்குச் சென்று ஊதி யத்துடன்) உள்நாட்டுப் பட்டினக் கரையை வந்தடைந்த மரக்கலத்தின் வெற்றிக்கு ஒப்பாகும் என்பர். 250