உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 இன்பவியல் 26. நல்லறிவு இல்லாமை நுட்பமான அறிவு இல்லாமையே ஏ ழ ைம யாகும். அந்த நுண்ணறிவு உடைமையே கெப்பும் கிளேயுமாய் மிக வளர்ந்த பெருஞ்செல்வமாகும். நினைத்துப் பார்க்கின், பெண்மையை விரு ம் பி ஆண்மையை இழந்த பேடியானவள் கண்கவர்ந்துவிரும்பத்தக்க அணிகலன்களை அணியமாட்டாளோ? (அணிவாள்). எனவே, அறிவிலார் செல்வம் பேடியின் நகைபோன்றது. 251 பல வகையாய் நிறைந்த கேள்வியறிவின் பய ன் உணர்ந்த கற்ருேர் சிறப்பிழந்து வறுமைத் துயரால் வருந்துவதை அறிகின்றிர் எனில் அதன் கார ண ம் இதோ: தொன்று தொட்ட சிறப்புடைய நாக்கிற்கு உரிய கலைமகள் கற்றவரிடம் சேர்ந்திருத்தலால், தாமரைப் பூவிற்கு உரிய திருமகள், மருமகளாகிய கலைமகளோடு பிணங்கிக் கற்றவரைச் சேராதிருக்கிருள். 252 கற்பாயாக என்று இளமையில் தந்தை சொல்லியும், அதனை ஒரு சிறந்த சொல்லாகக் கொள்ளாமல் புறக் கணித்துக் கல்லாது கழிந்த ஒருவன், எழுதிய ஒலையைப் பலர் முன்னே மெல்ல நீட்டிப் படிக்கும்படி கூறினல், உடனே சினந்து குற்றமாகக் கோலை அடிக்க எடுத்துக் கொள்ளுவான். 253 கற்காமல் நீண்டு வளர்ந்த ஒருவன் உலகில் நல்ல அறிஞர்களின் நடுவிலே புகுந்து ஒன்றும் பேசாமல் மெல்ல அமர்ந்திருப்பினும், அது, நாய் வாளா இருப்பது போலாம்; அவன் வாளா இராமல் ஏதாவது பேசிலுைம், அது, நாய் குலைப்பது போலாம். ' . 254 கடைப்பட்டவர் எல்லாரும், அறிவோடு பொருந்தாத அற்பர் குழுவைச் சீர்ந்த பொய்ப் புலவர்களின் நடுவிலே புகுந்து, தாம் நூற்களில் கல்லாத வீண் செய்திகளைச் சொல்வர். பெரியேர்ர்ோ, தாம் கற்றறிந்த கருத்துக்களைக் கீழோர்கேட்பினும்,அக்கருத்துக்களில் ஆழ்ந்து தோயாமல் மேலோடு விடுவதை அறிந்திருப்பதால் ஒன்றும் பேசார்.