உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 துன்பவியல் ‘என்னுடையது-என்னுடையது'என்று எண்ணிக்கொண் டிருக்கும் அறிவில்லாத கருமியின் செல்வத்தை யானும் ‘என்னுடையது - என்னுடையது என்று எண்ணிக் கொண்டிருப்பேன். தனதாயிருந்தும், அவன் அதனைப் பிறர்க்கும் வழங்குவதில்லை-தானும் பயன் துய்ப்பதில்லை; அந்தச் செல்வத்தைப் பொறுத்தமட்டிலும் யானும் அது போலத்தான்! 276 பிறர்க்கு உதவாத செல்வரைக் காட்டிலும் வறியவர்கள் தப்பிப் பிழைத்தார்கள்; அதாவது: முதலாவதாக, செல் வத்தை இழந்துவிட்டார் என்னும் துன்பத்திலிருந்து தப்பி னர்; அடுத்து, வருந்தி அதனைக் காக்கும் தொல்லையி லிருந்து தப்பினர்; மூன்ருவதாக, கீழே புதைப்பதற்காக மண்ணைத்தோண்டும் துன்பத்திலிருந்து தப்பினர்; அடுத்து, தம் கைவலிக்கப் பொருளைப் பிடித்துக் கொண்டிருக்கும் தொல்லையிலிருந்து தப்பினர்; இப்படியாக இன்னும் பல துன்பங்களிலிருந்து தப்பினர். 277 பொருள் தனதாக இருக்கும்போது தான் வழங்கான், (தான் இறந்தபின்) தன் மரபினர் தம்முடைய தாக்கிக் கொண்டபோது அவர் வழங்கார்; இவன் தனதாக இருந்தபோது முன்பு கொடுத்திருந்தால் தன் மரபினர் தடுத்திரார். இவன் இறந்தபின் அவர்கள் வழங்கும்போது இவன் தடுக்க முடியாது. 278 இரப்பவர் கன்ருகவும் கொடுப்பவர் பசுவாகவும் ஆர்வத் துடன் (பால் போல்) பொருளைச் சொரிந்து கொடுப்பதே வள்ளன்மையாகும். ஆர்வமின்றி, வலிதாய்க் கறப்பவர் ஊன்றியிழுக்கப் பாலச் ச்ொட்டும் பசுப்போல, வழி வகுத்துக் கொல்வதுபோல் வருத்தினலேயே கீழ்மக்கள் பொருளைச் சுரப்பர். t 279 பொருளைத் தேடுதலும் துன்பம்; அப்படித் தேடி ஈட்டிய நல்ல பொருளைக் காத்தலும் அங்கே கடுந்துன்பம்; காவல் குறை பட்டாலும் துன்பம்; பொருள் அழியினும் துன்பம்; இவ்வாருக அந்தப் பொருள் துன்பத்திற்கே உறைவிடமாகும். 280