உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 130 31. இரவச்சம் 'நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார்; எஞ்ஞான்றும், தம்மாலாம் ஆக்கம் இல’ரென்று-தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவினவர். 301, இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவருே? - விழித்திமைக்கு மாத்திரை அன்ருே ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. 302 இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி;-புல்லா “அகம்புகுமின் உண்ணுமின்' என்பவர்மாட்டல்லால் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303 திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோ டுயர்வுள்ளின் அல்லால் அருத்தஞ் செறிக்கும் அறிவிலார் பின்சென்(று) எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல். 304 கரவாத திண்ணன்பிற் கண்ணன்னர் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை;-இரவினே உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு! 305