உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பகையியல் பகை இயல் 33. புல்லிய சிற்றறிவு உடைமை அருளினல் நல்லறம் கூறும் அன்புடையவரது வாய் மொழியை அறிவுள்ள புலவர் உயர்ந்த பொருளாக ஏற்றுக் கொள்வர். பால் ஊற்றிய கூழைத் (பாயசத்தை) துழவும் அகப்பை சுவைத்துணராதது போல, உண்மைப் பொருள் உண்ராத அறிவிலி அவர் வாய்மொழியை இகழ்ந்து பேகவான். ‘. 321 தோலேக் கவ்வித் தின்னுகிற புலேநாயானது பால் சோற்றின் சுவையை அறிந்து கொள்ளாதது போல, பொருமையில்லாத நல்லவர் அறநெறியை எடுத்துச் சொல்லும்போது, ஒழுங்கானவர் அல்லாதவர் அதனைக் காது கொடுத்துங் கேளார். ' 322 கண்ணிமைக்கும் நேரத்தில் தமது இனிய உயிர் பிரிந்து போகலாம் என்னும் உண்மையை எத்தனையோ விதங் களாலும் தாம் அறிந்திருந்தும், தினையளவும் நல்லது செய்யாத நாணம் இல்லாத-மடத்தனம் உடைய மாக்கள் செத்தால்தான் என்ன! சாவாமல் இருந்தால்தான் ಪಚ್ಟೆ உள்ள வாழ்நாட்களோ சிலவே! உயிர்க்கோ பாதுகாப்பு இல்லை. பலரும் தூற்றிப்பேசும் பழியோ மிகுதி! எனவே, உலக மக்கள் பலருள்ளும் கண்டவரோ டெல்லாம் சிரித்துப் பேசாமல், ஒருவன் மாறுபட்டு விலகித் தனித்துப் பகை கொள்வது ஏனே ? 324 பலர் கூடியிருந்த அவை முன்னே போய் ஒருவன் மற் ருெருவனே வைதானுக, வையப்பெற்றவன் ஒன்றும் செய்யாது வாளா இருப்பானேயாஞ்ல், வைதவன் வாழ்வு கெடுவான் . அங்ங்ணம் கெடானுயின், வியக்கப்படத்தக்க வனேயாவான் ! 325