உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 பகையியல் 36. மிகவும் தாழ்ந்த தன்மை 4. நிறைந்த அறிவுடையேர் வ்ய்தில் சிறியவ ரானலும் தம் பண்பைப் போற்றிக் காத்து அடக்கமாய் ஒழுகுவர். அற்ப அறிவினரோ, வயது முதிருந்தோறும் கெட்ட செயல்களையே மிகவும் செய்து கழுகுபோல் ஊர் சுற்றித் திரிந்து குற்றத்திலிருந்து விடுபடார். 351 செழுமையான பெரிய தடாகத்திலே வாழ்ந்தாலும், தவளைகள் எப்போதும் தம்மேலுள்ள ஒருவகை வழுவழுப் பான அழுக்கைப் போக்கிக்கொள்ளமாட்டா, அதுபோல், குற்றமற்ற சிறப்புடைய நல்ல நூற்களைக் கற்றபோதும், நுட்ப அறிவு ஒருசிறிதும் இல்லாதவர், நூற்பொருளை ஆராய்ந்து தெளியும் ஆற்றல் இலர். 352 கூட்டமான குன்றுகள் நிறைந்த நல்ல நாடனே ஒரு வரது கண் எதிரே இல்லாமல் புறத்தே அவரது நற்பண்பு களைக் கூறற்கும் என்னவோபோல் இருக்கிறது. ஆனால், அவரது பண்பு இழுக்கடையும்படி அவர் பக்கத்தில் நின்றே குற்றங்களைத் துற்றும் அற்பர்கட்கு நாக்கு எதல்ை செய்யப்பட்டதோ - தெரியவில்லையே ! 353 பக்கம் உயர்ந்து அகன்ற அல்குலே (வயிற்றின் கீழ்ப் பாகம்) உடைய குடும்பப் பெண்கள், தமது பெண்ம்ைக்கு உரிய ஒப்பனையைத் (அலங்காரத்தைத்) தோழியர் செய் வதுபோல் செய்ய அறியார். ஆனல், அவரல்லாத விலை மாதரோ, திரண்டு புதுநீர் பெருகுவதுபோல, தம் பெண்மை யழகைத் தாமே அணிசெய்து காண்பித்துத் தம்மைப் பெரிதாய் மதித்து வரம்பு கடந்து செல்வர். - 354 அற்பர்கள் அருளாளர்க்கு யாதொன்றும் உதவார்; தமக்குத் துன்பம் செய்பவரைக் காணின், அவருக்கு எவ்வளவு உதவியும் செய்வர். ஆதலின் அந்த அற்பர்கள், தளிரின்மேலே வைக்கப்பட்டிருப்பினும் ஒருவர் தட்டாமல் உள்ளே செல்லாத உளியின் தன்மையராவர்.அந்தோ!355