பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பன்னெறியியல் பன்னெறி இயல் 37. பல வகை இயல்புகள் விரும்பத்தக்க மாண்புடைய ம்னவியைப் பெற்றில்லாத வனது இல்லம், மேகம் தவழும் அளவு உயர்ந்த மாட மாளிகையாய், சிறப்புடைய காவல் பொருந்தியதாய், நூல் திரிவிளக்கு என்றும் அணையாது நிலையாக எரியக்கூடியதா யிருப்பினும் என்ன பயன்? அது, பார்த்தற்கும் முடியாத ஒரு காடேயாம். 361 வழுக்குதல் சிறிதும் இல்லாத வாள் முனையில் காவலில் வைக்கப்பட்டிருப்பினும், தாம் இழுக்கான வழியில் செல்வா ராயின், மென்மையான மொழிபேசும் பெண்கள் யாதும் தவறு செய்யாத காலம் சிறிதளவே கற்பொழுக்கம் இல்லாத காலமே பெரிதாகக் கருதப்படும். 362 (கணவன் சினங்கொள்ளின்) என்னை அடி என்று எதிர்த்து நிற்பவள் கணவனுக்கு எமனுவாள்; விடியற் காலையிலேயே சமையற்கட்டில் புகுந்து வேலை தொடங் காதவள் கொடிய நோயாவாள்; சமைத்ததனை நல்ல உணவாகக் கணவனுக்கு இடாதவள் வீட்டில் வாழும் பேயாவாள். இம்முவகைப் பெண்டிரும், கொண்ட கண வனைக் கொல்லும் படைக்கலங்களாகும். 363 திருமணத்தைக் கைவிடுக என்று சொல்லக்கேட்டும் கைவிடவில்லை; (முதல் மனைவி. இறந்தபோது) வெடி யோசை படச் சாப்பறை முழங்கியதைக் கேட்டும் தெளிவு பெற்ரு னில்லை. மீண்டும் ஒரு மனைவியை மணந்து கொண்டு இன்பமாய் வாழ்வதாக நினைக்கும் மயக்கம், தன்மேல் தானே கல்லே எறிந்துகொண்ட தவறு ப்ோன்ற தாகும் என்று சொல்வர் அறிஞர். 364 தவஞ்செய்ய முயன்று வாழ்தல் ஒருவர்க்கு முதன்மைப் பண்பு; இனிய மனைவியருடன் தங்கிவாழ்தல் நடுத்தரமான செயல்; சேராது என்று நினைத்துப் பொருளாசையால் தம் பெருமை உணராதவர் பின்சென்று நிற்றல் கடைப்பட்ட بسی செயல், 3 t