உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 62 பொருட்பால் அரசியல் 14. கல்வி குஞ்சி அழகும் கொடுந்தானேக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல;-கெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. 131 இம்மை பயக்குமால், ஈயக் குறைவின்ருல், தம்மை விளக்குமால், தாம் உளராக் கேடின்ருல், எம்மை உலகத்தும் யாம்காணேம்; கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. 132 களர்நிலத் துப்பிறந்த உப்பினேச் சான்ருேர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும். 133 வைப்புழிக் கோட்படா; வாய்த்தியின் கேடில்லை; மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்; எச்சம் என வொருவன் மக்கட்குச் செவ்வ விச்சை; மற் றல்ல பிற. 134 கல்வி கரையில; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே; நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து. 135