பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. அரசியல் உயர்ந்த அழகிய இடமகன்ற விண்ணிலே வெண்கதிர் வீசும் விளக்கமுடைய வெண்ணிலாவின் நடுவே அமைந்து இருப்பதால், முயல் என அழைக்கப்படும் கறுப்புக் களங்கமும் மக்களால் வணங்கப்படுகிறது. அதுபோல, ஒருவர் குறைந்த பெருமை யுடையவரானுலும், மலேயன்ன பெரியாரின் நட்பைக் கொண்டால் நிறைந்த பெருமை பெறுவர். - பாலோடு கலந்த நீர் பாலாகுமே தவிர, நீரின் நிறம் தனியாய்த் தெரிந்து காணப்படாது. அதுபோல், ஆராயுங்கால், சிறந்த பெரியாரின் பெருந்தன்மையைச் சார்ந்தால் சிறியாரின் சிறுமைத்தனமும் தெரியாது மறையும். - 177 பெரிய கொல்லைக் காட்டில் அடிமரக் கட்டையோடு சேர்ந்துள்ள புற்கள் உழவர் உழும் கலப்பைக்கு அசைய மாட்டா. மெலிந்தவரானலும் நல்லினத்தாரைச் சார்ந்து உள்ளவர்பால் பகைவரின் சினம் செல்லாது. 178 நன்செய் நிலத்தின் நல்ல வளத்தால் நன்கு வளரும் நெற்பயிரேபோல், தாம் பிறந்த குடியின் பெருமையால் உயர்ந்தோர் உருவாகின்றனர். கப்பலின் கட்டமைப்பைக் கொடிய புய ற் கா ற் று வீசிக் கட்டழிப்பதுபோல, ஒருவரின் பெருந்தன்மை தீய கூட்டத்தைச் சார்வதால் கெட்டழியும். - - 179 அறுவடை செய்யப்பட்ட கொல்லக்காட்டில் தீவைக்கப் பட்டால், அதைச் சார்ந்து அருகேயுள்ள மணம் மிக்க சந்தன மரமும் வேங்கை மரமுங்கூட வெந்து போகும். அதுபோல, ஒருவர், மனத்திலே களங்கம் இல்லாதவரா யினும் தாம் சேர்ந்துள்ள திய கூட்டுறவால் 2009 - 0