பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

தமிழ்‌ உரைநடை புதிய உயிர்‌ தொடங்கி ஒன்றரை நூற்றாண்டுக்‌ காலம்தான்‌ ஆகின்றது. தமிழ்‌ உரைநடையினை மக்களுக்குரியதாக மாற்றும்‌ முயற்சியில்‌ கடந்த நூற்றைம்பது ஆண்டுக்‌ காலத்தில்‌ பல்வேறு நிகழ்வுகள்‌ நடந்துள்ளன. நாவல்‌, சிறுகதை என புனைகதை இலக்கிய வடிவங்கள்‌ ஏராளமான இதழ்களில்‌ வெளிவந்த ஆசிரியவுரைகள்‌, செய்திகள்‌, கட்டுரைகள்‌, பிறவகை எழுத்துக்கள்‌ இவையெல்லாம்‌ தமிழ்‌ உரைநடை வளர்ச்சிக்குத்‌ தங்கள்‌ பங்கினை ஆற்றியுள்ளன. ஆனால்‌ இந்த வளர்ச்சியின்‌ வகைமை பாட நூற்களில்‌ காணக்‌ கிடைக்கவில்லை.

தமிழ்ப்‌ பாடநூல்கள்‌ பெரும்பாலும்‌ இலக்கிய இலக்கணம்‌ சார்ந்ததாகவே கட்டுரைகளைக்‌ கொண்டிருக்கின்றன. இவற்றின்‌ வகைபாடுகளும்‌ மிகக்‌ குறைவே. 17 வயதிற்கு மேற்பட்ட மாணவன்‌ பலதுறையியல்‌ சார்ந்த அறிவுத்திறத்தை அமைத்துக்‌ கொள்வதில்‌ தமிழ்ப்‌ பாடநூல்களும்‌, எழுத்தாளர்‌களும்‌, போதிய அக்கறை செலுத்தியதாகச்‌ சொல்ல முடியாது. இலக்கியங்கள்‌ உணர்த்தும்‌ பல்வகை விழுமியங்களோடு நிகழ்‌ சமூகத்‌ தேவை பற்றிய சிந்தனைகளும்‌ நம்முடைய இளைஞர்களுக்குத்‌ தேவை. இத்தகைய எண்ணங்களை அவர்கள்‌ நெஞ்சில்‌ ஊன்றும்‌ வகையில்‌ இக்கட்டுரைநால்‌ ஒரு சிறு முன்‌முயற்சியாகும்‌.

தொ.பரமசிவன்‌