பக்கம்:நாவுக்கரசர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.6 நாவுக்கரசர்

வுடன் இல்லத்தை அடைகின்றான். நஞ்சின் ஏழாம் வேகம் தலைக்கேறுதலால் உரைகுழறிக் கண்ணும் மேனியும் கருகத் தான் கொணர்ந்த வாழைக் குருத்தைத் தாயிடம் சேர்ப்பித்து மயங்கித் தரையில் வீழ்கின்றான்.

இங்ஙனம் தளர்ந்து தரையில் வீழும் மகனை நோக்கிய அவன் பெற்றோர்கள் அவன் உடலில் குருதி வழியும் நிலை யினையும் விடம் சென்னிக்கேறி இறந்த அடையாளத்தை யும் கண்டு ‘திருநாவுக்கரசர் திருவமுது செய்தருள்வதற்குத் தடையாகுமே” எனப் பெரிதும் கலக்கமடைகின்றனர். மகன் மரித்த செய்தி சிறிதும் புலனாகாதபடி அடிகளை அமுது செய்விக்கும் உறுதியுடன் பெறலரும் புதல்வன் உடலைப் பாயினுள் வைத்து மூடி இல்லத்தின் புறத்தே ஒரு பக்கத்தில் மறைத்து வைக்கின்றனர். அமுது செய்யக் காலம் தாழ்க்கின்றதென்ற கவலையுடன் திருநாவுக்கரசரை அடைந்து இறைஞ்சி நின்று, “எம்குடி முழுவதும் உய்யக் கொள்வீர், அமுது செய்ய எழுந்தருள வேண்டும்’ என அழைக்கின்றனர்.

விடந்தீர்த்தல் : நாவுக்கரசர் அதற்கிசைந்து எழுந்து சென்று ஆசனத்தில் அமர்கின்றார். அப்பூதியடிகட்கும் அவரது இல்லத்தரசியார்க்கும் திருநீறு அளிக்கின்றார். அவர்தம் புதல்வர்க்கு வழங்கும்போது மூத்த திருநாவுக் கரசனைக் காணாது அப்பூதியடிகளை நோக்கி, தும் மூத்த மகனை இவண் வர அழையும்’ என்கின்றார். இப்போது இங்கு அவன் உதவான்’ என்கின்றார் அப்பூதியார். இவ் வரை கேட்ட நாவுக்கரசரின் செவ்விய திருவுள்ளத்தில் ஒருவிதத் தடுமாற்றம் உண்டாகின்றது, அப்பர் பெருமான் அப்பூதியாரை நோக்கி, என்னுள்ளம் இவ்வுரை கேட்கப் பொறாது, ஏதோ வேண்டாதது நிகழ்ந்துள்ளது. நிகழ்ந்ததை நேர்மையுடன் உரைப்பீராக’ என்று பணிக் கின்றார். அப்பூதியடிகள் அஞ்சி நடுக்கமுற்று அடியார் அமுது செய்யத் தடையாயிருப்பினும் நிகழ்ந்தது கூறலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/159&oldid=634152" இலிருந்து மீள்விக்கப்பட்டது