உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ந்ாவுக்கரசர்

என்பதாகக் கருதுவர்பேராசிரியர் க. வெள்ளைவாரணனார். இப்பொழுது கரைந்து (5. 12) என்ற முதற்குறிப்புடைய பாமாலை பாடி மிழலை மாமணியை வழுத்துகின்றார்.

இதில்,

எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர் உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே கெடுப்ப தாவது கீழ்கின்ற வல்வினை

விடுத்துப் போவது வீழிமி ழலைக்கே.(5)

என்பது ஐந்தாவது பாடல்.

விழிமிழலையானிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வன்னியூர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். காடு கொண்ட (5. 2.6) என்ற திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலையால் சேவிக்கின்றார்.8

ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர் தானம் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம் தானங் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே(3)

என்பது மூன்றாவது பாடல்.

5. பன்னிரு திருமுறை வரலாறு. இரண்டாம் பகுதி. (திருநாவுக்கரசு தேவாரம் வரலாற்று முறைத் திருப்பதி கத்தில் அட்டவணை-பக். 64)

6. வன்னியூர்: மயிலாடுதுறை.காரைக்குடி இருப் பூர்தி வழியிலுள்ள பூந்தோட்டம் (பேரளத்தருகிலுள்ளது) என்ற நிலையத்திலிருந்து 7 கல் தொல்ைவு. வன்னி (அக்கினி) பூசித்ததலம்.திருமுறைகளில் ஒரே ஒரு பதிகத்தை புடைய திருத்தலம். காவிரி தென்கரைத் தலமான இதற்கு வந்த சூழல் தெளிவாகத் தெரியவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/235&oldid=634236" இலிருந்து மீள்விக்கப்பட்டது