உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நாவுக்கரசர்

திருவண்ணா மலைக்கு வருகின்றார். அப்பர் பெருமான் மூன்று பதிகத்தால் அண்ணாமலையாரை வழிபடுகின்றார். ‘ஓதிமாமலர்கள்’ (4.68) என்பது முதலாவது திருநேரிசைத் தமிழ்மாலை. -

இரவியும் மதியும் விண்ணும்

இருகிலம் புனலும் காற்றும் உரகமார் பவனம் எட்டும்

திசையொளி உருவ மானாய் அரவுமிழ் மதிகொள் சோதி

அணியணா மலையு ளானே: பரவுகின் பாத மல்லால்

பரமநான் பற்றி லேனே. (7) என்பது இம்மாலையில் ஏழாவது வாடா நறுமலர்.

வட்டனைப் (5.4) என்ற முதற் குறிப்புடைத் திருக் குறுந் தொகைப் பதிகம் அண்ணாமலை பற்றியது. இதில்,

வீர னைவிடம் உண்டனை விண்ணவர் தீர னைத்திரு அண்ணா மலையனை ஊரனை யுன ரார்புற மூன்றெய்த ஆர னைஅடி யேன்மறந் துய்வனோ? (7)

36. அண்ணாமலை (திருவண்ணாமலை): விழுப்புரம் காட்பாடி இருப்பூர்தி வழியில் திருவண்ணாமலை நிலையத் திலிருந்து ஒரு கல் தொலைவு. பஞ்சபூதத் தலங்களுள் இது தேஜஸ் என்னும் தீயைக் குறிக்கும், திருவாசகம் கூறும் (திருவெம்-1) அழல் உருவே இப்போது மலையுருவா யுள்ளது. மலையின் உயரம் கடல் மட்டத்திற்கு மேல் 2668 அடி அருணகிரிநாதர் வாழ்ந்து முத்தி பெற்ற தலம். திருவெம்பாவையை மாணிக்கவாசகர் பாடியது இத் தலத்தில். அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, சோணசைல மாலை, அருணைக் கலம்பகம் இத்தலத்தைப் பற்றியவை: புகழ் பெற்றவை. திருக்கார்த்திகை அண்ணா மலையார் தீபம் புகழ் பெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் தீபத்தைச் சேவிப்பார்கள். அண்ணாமலை நடு நாட்டுத்தலம். - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/257&oldid=634260" இலிருந்து மீள்விக்கப்பட்டது