பக்கம்:நாவுக்கரசர்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 நாவுக்கசரர்

என வருவது இப்பதிகத்தின் முதற் பாடல். நாம் எல்லாப் பாடல்களையும் பாடிப் அப்பர் பெற்ற அநுபவம் பெற வேண்டும். இதைப் பாடிப் போற்றிய நிலையில் நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக் கீழ் எய்தி இன்புறுகின்றார். இங்ஙனம் நாவுக்கரசர் பெருமான் திருப்புகலூர் இறைவன் திருமுன் நின்று உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே என்று செந்தமிழ்த் தாண்டக மாலையால்போற்றியநிலையிலேயே இவ்வுலக வாழ்வைத் துறந்து அறவாழி அந்தணனாகிய இறைவன் அருளொளியில் கலந்து திருவடியை அடைந்த நன்னாள் சித்திரைத் திங்களில் சதயத் திருநாள் என்று கூறுவர் சேக்கிழார் பெரும்ான். -

நாவுக்கரசரின் வாழ்வு நல வாழ்வு: அற்புதத் திரு வாழ்வு.தமிழோடு இசைபாடிச் சிவானந்தத்தை அநுபவித்த பெரு வாழ்வு. திருநின்ற செம்மை இவரது வாழ்வில் எங் கெங்கும் ஒளிவிட்டுக் காட்டுகின்றது. அப்பர் பெருமான் சிறந்த கவியோகி; ஞானச் செம்மல். பக்தியின் கொடு முடியைக் கண்டவர். வாகீசப் பெருமான் வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப் பெற்றதால் அவர் வாழ்வு பூரணத்துவம் பெற்று இலங்கு கின்றது. தம் முற்றிய வாழ்வின்-ஆன்மப் பயணத்தின்முழுமையினை அவர்தம் வாழ்வில் தெளிவாகக் காணமுடி கின்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/317&oldid=634330" இலிருந்து மீள்விக்கப்பட்டது