உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நாவுக்கரசர்

பதிகம் பல தலங்களையும் நினைப்பதால் பலவகைத் திருத் தாண்டகம்’ எனப்படுகின்றது. தலவழிபாடு முக்கியம் என் பதை அறிவுறுத்துவது. பதிகம் முழுவதையும் அநுபவிப்பது நம் கடமை.

ஆமயந்தீர்த் (6,96) என்ற முதற்குறிப்பையுடைய பதிகத்தில்,

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்;

பூதப்ப டைகள் புடைசூழக் கொண்டார்; அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்;

அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக்

கொண்டார்: கொக்கிறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்;

கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்; செக்கர்கிறத் திருமேனி திகழக் கொண்டார்;

செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. (4) என்பது இதில் நான்காம் பாசுரம். ஒவ்வொரு பாசுரத் திலும் சிலவற்றைக் கொண்டார்’ என்று கூறிச் சிவ பெருமானை அடையாளங் காட்டுவதுடன் அடியேனை ஆட்கொண்டார்’ என்று முடிவதால் இது பரவுகிலைத் திருத்தாண்டகம்’ ஆகின்றது. பரமனைப் பரவுவதைக் காட்டுகின்றதல்லவா?

பொருப்பள்ளி (6.71) என்ற முதற்குறிப்புடைய பதிகத்தில,

நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு

கலந்திகழும் நாலாறும் திருவை யாறும் தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குள முகல்

லிடைக்குள மும் திருக் குளத்தோ டஞ்சைக்களம் விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெலலிக்கா

கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா கள்ளார்ந்த கொன்றையான் கின்ற ஆறும்

குளம்களங்கா எனஅனைத்தும் கூறு வோமே. (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/319&oldid=634332" இலிருந்து மீள்விக்கப்பட்டது