உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 3

மாசில்மதி டுேபுனல்

மன்னிவளர் சென்னியனைப் பேசஇனி யானைஉல

காளுடைய பிஞ்ஞகனை ஈசனைஎம் பெருமானை

எவ்வுயிரும் தருவானை ஆசையில்ஆ ராவமுதை

அடிவணங்கி இனிதிருந்தார்.8

என்றும் விளக்குவர். இங்ஙனம் நாவுக்கரசர் நீற்றறையி னுள்ளே பிறைசூடிய பிஞ்ஞகனை நினைந்த வண்ணம் அவனது திருவடி நீழலென இன்புற்றமர்ந்திருந்தபொழுது,

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி கீழலே(1) (5.90;1)

என்று தொடங்கும் திருக்குறுந்தோகைப் பதிகத்தை அடிகள் அருளினார் என்று பெரியோர் பணிப்பர். ஆனால் இது தனிக்குறுந்தாண்டகமாகத் தொகுப்பில் காணப் படுகின்றது.

ஏழு நாட்கள் சென்ற பின்னர் பல்லவர்கள் சமணர் களை அழைத்து நீற்றறையைத் திறந்து பாடுங்கள்’ என்று பணிக்க, அவர்களும் அதனைத் திறந்துபார்க் கின்றனர். என்ன அதிசயம்! திருநாவுக்கரசர் யாதொரு துன்பமுமின்றி இனிதிருத்தலைக் கண்டு வியப்புறுகின்றனர். அவர் இருந்த நிலையைச் சேக்கிழார் பெருமான்,

ஆனந்த வெள்ளத்தின்

இடைமூழ்கு அம்பலவர்

3. டிெ டிெ 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/74&oldid=634428" இலிருந்து மீள்விக்கப்பட்டது