பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 நினைவு அலைகள் வேண்டுமோ அதைக் கொடுத்தார். எனவே எல்லாரோடும் ராசி'யாக இருந்தார். - ஒரு முறை, விடுமுறையின் போது, நெய்யாடுபாக்கம் சென்றிருந் தேன். என் தந்தை என்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தார். காஞ்சிபுரம் சென்று சிறு பாசன மேற்பார்வையாளரிடம் ஒர் ஒட்டிய கடிதத்தைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். அப்படியே செய்தேன். மேற்பார்வையாளர், கனிவோடு வரவேற்றார். கடிதத்தை உடைத்தார். உள்ளே இருந்தது என்ன? செய்தியல்ல. சில நோட்டுகள். அவற்றை எண்ணிப் பார்த்தார், பெட்டியில் வைத்துப் பூட்டினார். 'உங்க அப்பா எப்பவும் கறார். தம்படி குறையாது கொடுத்தனுப்பியது சரியாக இருக்கிறது என்று சொல்லு' என்று விடைகொடுத்தனுப்பினார். அது என்னவென்று அப்போது எனக்கு விளங்கவில்லை. அப்போது நான் உலகியல் அறியாதவன். திகைப்போடு ஊர் திரும்பினேன். நான் கொடுத்துவிட்டு வந்த பணத்தைப் பற்றிக் கேட்டேன். 'அதுவா? ஏரி வேலைக்குச் சேர வேண்டிய பணம், போன வாரம் வந்தது. அதில் மேற்பார்வையாளருக்குச் சேரவேண்டிய மாமூலைக் கொடுத்தனுப்பினேன். இந்த மேற்பார்வையாளர் மாமூலாகிய பத்து விழுக்காட்டுக்குமேல் கொடுத்தாலும் வாங்க மாட்டார். மற்றவர்களைப் போல், பணம் கைக்கு வந்த பிறகே, பில்லில் கையெழுத்து இடுவே னென்று சொல்லவும் மாட்டார். இவர் மிக நல்லவர்' என்றார். * 'மாமூல் என்னும் சொல் என்னுடைய பலநாள் தூக்கத்தைக் கலைத்தது. மாமூல் வாங்கும் பொறியியல் துறையில் அடியெடுத்து வைக்கக்கூடாது என்னும் வெறி ஊறிற்று. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை அப்போது நான் அறியவில்லை. பொறியியல் படிப்புக்குப் போவதில்லை என்று முடிவு செய்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/360&oldid=787201" இலிருந்து மீள்விக்கப்பட்டது