பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நினைவு அலைகள் இந்தச் சிறப்பே, புரட்சிகரமான கருத்துகளைப் பொழிந்து வந்த பெரியாரின் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஏராளமான தாய்மார்கள் தயங்காமல் வரும் நிலையை உருவாக்கிற்று. எனவே ஒருவரின் ஊழியமோ, தொண்டோ, உரிய முழுப் பலனைப் பெறுவதற்குத் துணை, அவருடைய ஒழுக்கம், அதனால் பரவும் நம்பிக்கை முதலியன என்பது, இளமையில் என் நெஞ்சில் பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது. இவை என்னை நேர்மை வழியில், ஒழுக்க நெறியில் செம்மையாக நடத்தி வந்தன. பிற்காலத்திற்குப் பெரிதும் பயன்படப்போகும் சில நல்லுணர்வுகள் என்னுள் வேர்விட்டு முளைத்து வளர்ந்தது, அந்த அவலப் பருவத்தில் மின்னொளியாக விளங்கியது. இந்த நூற்றாண்டின் முப்பதுகளின் தொடக்கத்தில் பல முதலாளித்துவப் பேரரசுகள், பொதுஉடைமைக் கொள்கையைப் பரவாதபடி தடுத்துவிடலாம் என்று மனப்பால் குடித்தன. உலகத்தின் முதல் சமதர்மப் பாட்டாளி ஆட்சியை, குழந்தைப் பருவத்திலும் பதினான்கு வல்லரசுகளின் கூட்டுத் தாக்குதல்களாலும் அழிக்க இயலவில்லை என்பது வரலாறு. அதையும் மறந்துவிட்ட பிரிட்டானியர்கள், தங்கள் ஆட்சியில் இருந்த இந்தியாவில் சமதர்மக் காற்றே விசாதபடி செய்துவிட முடிவு செய்தார்கள்; இந்திய ஆட்சிக்கு ஆணையிட்டார்கள். அது சமதர்மத்திற்கு எதிராக அடக்குமுறைக் கருவிகளை முடுக்கிவிட்டது. சென்னை மாகாணத்தில், பெரியாரின் இயக்கத்தின் மேல் அடக்குமுறை முதலில் பாய்ந்தது. 'குடிஅரசு அலுவலகம் சோதனை இடப்பட்டது. நாற்பதுக்கு மேற்பட்ட கடிதங்களையும் குறிப்புகளையும் காவல்துறையினர் கைப்பற்றிச் சென்றார்கள். - பெரியார் ஈ.வெ.ராமசாமியும் அவருடைய தங்கை திருமதி கண்ணம்மாளும் (வெளியிடுபவர்) கைது செய்யப்பட்டார்கள். இருவர் பேரிலும் வழக்குத் தொடரப்பட்டது. குற்றச்சாட்டுகள் என்ன? அரச வெறுப்பு, பொதுஉடைமைக் கோட்பாடு இவ்விரண்டையும் பரப்பினதாக இருவரும் குற்றவியல் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். வழக்கின் முடிவில், இருவருக்கும் ஆறு மாதக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள், ஏராளமான தமிழர் உள்ளங்களில் கொந்தளிப்பை உண்டாக்கின. என் உள்ளத்திலும் கொந்தளிப்பை உண்டாக்கின: உறுதியை மேலும் வளர்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/459&oldid=787359" இலிருந்து மீள்விக்கப்பட்டது