பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 நினைவு அலைகள் இளந்துணை ஆய்வாளனாகிய என்னை மதுரை மாவட்டம் பெரியகுளத்திற்கு மாற்றியிருப்பதாக மதுரை மண்டல ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து ஆணை ஒன்று பறந்து வந்தது. இருபத்திநான்கு மணிகளில், அம்மாறுதல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று கண்டிப்பான கட்டளை அது. --- இந்த ஆணை என் கைக்குக் கிட்டுவதற்கு முன்பே, மற்றோர்ஆனை விரைந்து வந்தது. மாற்றல் நிறுத்தப்பட்டது மாறுதல் ஆணையை அப்போதைக்கு நிறுத்தி வைப்பதாகப் பொதுக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். ஏன் அப்படிச் செய்தார்? "விமானத் தாக்குதல் பாதுகாப்புப் பணியில், அதைப் போன்ற சில போர் ஆதரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களைச் சென்னையிலிருந்து மாற்றக்கூடாதென்று உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாம். அதை உடனே நடைமுறைப்படுத்தும் துடிப்பில் இயக்குநர், மண்டல ஆய்வாளரின் ஆணையை நிறுத்தினார். அக்காரனம், மதுரையிலிருந்தவருக்குத் தெரியப் பல நாள்கள் ஆயின. அது வரை, நான், என் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெரியகுளத்திற்கு மாற்றியதைத் தடுத்துவிட்டேன் என்று அவர் பொருமினார். என் வேலை பற்றித் தேவையற்ற காரசாரமான கடிதங்கள் வந்தன. நானோ கிணற்றில் வீழ்ந்த கல்லாக இருந்தேன். சப்பானிய அச்சுறுத்தல் நெருங்கியபோது திருவல்லிக்கேணி போன்ற கடல் ஒரப் பகுதிகளில் இருந்த பல குடும்பங்கள், வெளியூர்களுக்குச் சென்றன. பலர், பல்லாவரம் போன்ற பகுதிகளுக்குக் குடியேறிவிட்டனர். இந்திய அரசுப் பணியில் குருசாமி அப்போது திரு. சா. குருசாமிக்கு இந்திய அரசின் வணிகத்துறை அமைச்சகத்தில் வேலை கிடைத்தது. எப்படி? அவ்வமயம் இந்திய அரசின் வணிகத்துறை அமைச்சராகத் திரு. ஆற்காடு இராமசாமி முதலியார் இருந்தார். அவருக்குக், குருசாமியை நன்றாகத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/765&oldid=787768" இலிருந்து மீள்விக்கப்பட்டது