உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 நினைவு அலைக - - அவர் என்னைப் பாராட்டி வாழ்த்தினார். அறிவுரையும் கூறின. 'உனக்கு நீண்ட அறிவுரை தேவை இல்லை; ஆனால் ஒன்று: "உன் பதவிக்காலம் பல ஆண்டுகளுக்குத் தொடரும். அப்போது நல்லவர்கள், அல்லாதவர்கள், இரண்டுங் கெட்டான்கள் ஆகிய மூன்று வகையினரிடம் நீ வேலை வாங்க வேண்டியிருக்கும். 'அச்சூழலில் பெரும்பாலான அலுவலர்கள் செய்கிற தவறு என்ன தெரியுமா? நல்லவர் அல்லாதவர்களையும், இரண்டுங்கெட்டான்களையும் மிரட்டி உருட்டி, வேலை செய்ய வைக்கும் முயற்சியில் முனைவதே ஆகும். 'அத்தவறை நீ செய்யாதே. நல்லவர்கள் மேல் நாட்டம் செலுத்து: அவர்களைத் தட்டிக்கொடு; அவர்கள் முழுமையாக இயங்க உதவு: ஆற்றலின் வரம்பைத் தொடும் அளவு ஊக்கப்படுத்து. அத்தகைய இரண்டொருவர் செய்யும் நற்பணி, உன் அலுவலில் உனக்குத தேவையான வெற்றியைக் குவிக்கும். o 'இதற்கிடையில், இரண்டுங்கெட்டான்களில் சிலராவது திருந்தி விடுவார்கள்; அரும்பாடுபட்டு உன் நம்பிக்கையைப் பெற முயல்வார்கள். அல்லாதவர்கள், கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்படுவார்கள். அவர்களைப் பொறுத்துக் கொண்டால் போதும். விழிப்பாக இருந்து அவர்கள் தீங்கு செய்யாதபடி மட்டும் கண்காணித்துக் கொண்டால் போதும்' என்று இயக்குநர் கூறினார். அவரோ அன்னியர்; நம் மக்களோடு மக்களாக இணைந்து வளராதவர். அவர் பேச்சைக் கேட்டு நடப்பதா, அல்லது நம்மில் ஒருவராகிய, நம் மக்களின் நல்ல, தீய இயல்புகளை, நெளிவு சுளிவுகளை அறிந்திருக்க வேண்டிய, திரு. லோபா காட்டிய வழியைப் பின்பற்றி நடப்பதா? இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த என்னிடம் இயக்குநர் ஒர் இரகசியச் செய்தியைச் சொன்னார். பொதுக்கல்வி இயக்குநர், புதியவனாகிய என்னிடம் காட்டிய நம்பிக்கை புல்லரித்தது. முதல் பாகம் முடிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/777&oldid=787781" இலிருந்து மீள்விக்கப்பட்டது