உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுத்தேனிப் விருந்து 85 ஆனால், எங்கோ கேட்க வேண்டிய கேள்வியை எவரோ ஏற்பாடு செய்த, பாராட்டு விழாவில் கேட்டுவிட்டார். “கல்வித்துறையில் இயக்குநராக வருபவர் குறிப்பிட்ட காலத்திற்காவது களப்பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டுமென்று ஒரு விதி இருக்கிறது. “அது எப்படி நியாயமாகும்? “கல்வித்துறையில் நிர்வாகப் பிரிவில் இருந்தாலும் கற்பிக்கும் பிரிவில் இருந்தாலும் மூத்தவர்கள் அனைவரையும் கணக்கில் கொண்டு, அவர்களில் தகுதியான ஒருவரை நியமிப்பதே நியாயம். “இப்போது நடைமுறையில் உள்ள விதிமுறை நியாயம் அல்ல. “எடுத்துக்காட்டிற்கு ஒன்று. ‘மேரி இராணி கல்லூரியில் முதல்வராக இருக்கும் செல்வி, கோமன், நெ. து.க.வைவிட பணிமூப்பு உடையவர். அவர் கற்பிக்கும் பிரிவிலேயே இருந்துவிட்டார் என்பதற்காக, அவரைப் புறக்கணிக்கலாமா?” என்று கேள்விக் குண்டைப் போட்டார். அது, ‘சிவ பூசையில் கரடி புகுந்தது போல்’ பலருக்குத் தோன்றியது. -- எனது ஏற்புரையில், அதைத் தொட்டுக் காட்டினேன். - “இன்று, சமுதாயத்திலே, ஆட்சியிலே, நிர்வாகத்திலே கடைப்பிடிக்கப்படும் அத்தனையும் நியாயமானவை என்று எவரும் வாதிட முடியாது; நானும் வாதிடமாட்டேன். “என்னைப் போன்றவர்களுக்கு அனுகூலமான இப்போதைய விதிமுறை எனக்கு உதவும் நோக்கத்தோடு அண்மையில் சேர்க்கப்பட்டதல்ல. "அன்னியர் ஆட்சிக்காலத்தில், அய்யா, சர். பி. டி. இராசன் அவர்கள் அமைச்சரவையில் இருந்த காலத்தில் உருவானதாக நினைவு. 'அவர்களும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அதற்கு ஒரு அடிப்படை இருந்ததாகக் கேள்வி. 'அன்று இயக்குநர் பதவியை நம்மவர் நின்ைக்கவே முடியாது. அது, ஆங்கிலேயருக்குத்தான் கிடைக்கும். "ஆங்கிலேய அலுவலர்களில் கண்ணாடிக் கூண்டுக்குள் வளரும் பூஞ்செடிக்கு ஒப்பானவர்களைக் காட்டிலும், நிர்வாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/125&oldid=787910" இலிருந்து மீள்விக்கப்பட்டது