உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== – - - = தர்மராசரின் பகல் உணவுத் திட்டம் - - TOT "தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர்கள் படிக்கிறார்கள். அவர்களில் அய்ந்து இலட்சம்பேர்களுக்கு உணவு கொடுக்கக் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும். "ஆனால், முதல் ஆண்டில், எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டாலும், முன்னேற்பாடுகளில் சில திங்கள் கழிந்துவிடும்; எனவே அர்ைக்கோடி இருந்தாலும் தாராளம். "ஆனால் சில ஆண்டுகளில், அந்தச் செலவு மூன்று நான்கு கோடிகளாக உயர்ந்து விடும்” என்று செலவின் வீச்சைக் கர்ட் டினே ன். - “சரிதான்” என்றார் முதல்வர். அவ் வேளை வரவேற்புரை முடியவும் மாநாட்டுத் தலைவர் மாநாட்டைத் தொடங்கி வைக்கும்படி மாண்புமிகு காமராசரை அழைத்தார். - காமராசரின் உரை முதலமைச்சர் காமராசர், மரபுப்படி, மாநாட்டை ஏற்பாடு செய்த்வர்களுக்கு நன்றி கூறினார். "த்ன்னாட்சி பெற்ற நம் நாட்டின் மக்கள் அனைவரும் முன்னுக்கு வந்து, கவலையற்று நல்வாழ்வு வாழ வேண்டும். “அதற்காகவே, நாட்டு விடுதலைக்குப் போராடி அதைப். பெற்றோம். மனித மேம்பாட்டிற்கு வேராக இருப்பது கல்வி அறிவு ஒன்றுதான். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அந்த அளவிற்குக் கல்வியை நாட்டில் பரப்ப வேண்டும். “கல்வி,. வளர்ச்சிக்குப் பலசாராருடைய ஒத்துழைப்பும் உதவியும் தேவை. "கடந்த காலத்தில் தனியார் துறையில் பலரும் நல்ல்படி பாடுபட்டதால்தான், இப்போதுள்ள அளவு எழுத்து அறிவாவது பெற்றுள்ளோம். = - * தனியார் நிர்வாகிகள், - - - - தொடர்ந்து கொண்டு. மனப்பான்மையோடு, கல்வியை வளர்த்து வாருங்கள். எல்லா ஊருக்கும் தொடக்கப் பள்ளி "நமது உடனடி வேலை நம் நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் தொடக்கப்பள்ளியை நிறுவ வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/140&oldid=787925" இலிருந்து மீள்விக்கப்பட்டது