பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நினைவு அலைகள் 'ஆனால் உங்களுக்கு ஒர் உறுதி கூற விரும்புகிறேன். எனது கடுமையான ஆட்சேபணையை இங்கே தெரிவித்துவிட்டேன். “சுழற்சங்கத்தில் அதையே சொல்லியபிறகு, வேறெங்கம் எதிர்ப்பைத் தெரிவிக்கமாட்டேன். “இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிற்கும் நான் பணிபுரியவில்லை என்றாலும், நான் அன்னியன் என்று உணர்வதால், புகுமுக வகுப்பிற்கு எதிர்ப்பான இயக்கத்தைத் தொடங்காமல் விட்டுவிடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன்” - இப்படி ரெவெரெண்ட் பாய்ட் திட்டவட்டமாகத் தமது கருத்தைத் தெரிவித்தார். அவசரம் வேண்டாம் “பள்ளிகளின் நிலையையும் உள்ளடக்கத்தையும் சீரமைக்க வாய்ப்பு கொடுத்துவிட்டு, பிறகு மறுபரிசீலனை செய்து, எந்த வகுப்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றுங்கள். இப்போதே முடிவு செய்துவிடத் துடிக்காதீர்கள். இது நான் கூறிய கருத்து. பல்கலைக் கழகத்தின் முடிவு முடிவு என்ன? “பள்ளிப் படிப்பை அரசு எப்படி மாற்றி அமைக்கும், எப்போது மாற்றி அமைக்கும் என்று சொல்வதற்கு இல்லை. 'இப்போதைக்கு நாம் மூன்றாண்டு பட்டப் படிப்பைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவோம். அதற்கு வழிவிடும் வகையில், ஈராண்டு இண்டர்மீடியட்டை ஒராண்டு புகுமுக வகுப்பாக மாற்றுவோம். “புகுமுகம் இடைக்கால ஏற்பாடே அரசு, பள்ளிப் படிப்பை மாற்றும்போது, அதற்கேற்ப நாம் புகுமுகப் படிப்பை விட்டு விடுவோம்” என்பது சென்னைப் பல்கலைக் கழகத்தின் முடிவின் சுருக்கம் ஆகும். இது செய்தி இதழ்களில் வெளியானது. புகுமுக வகுப்பைப் பற்றிச் சிந்திக்கத் தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களில் மாநாடு கூட்டப்பட்டது ஆந்திரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணா அதற்கு ஏற்பாடு செய்தார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரின் செல்வாக்கும் மற்றவர்களைச் சுற்றி வளைத்து, தம் வழிக்குக் கொண்டுவரும் திறமையும் வெளிப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/237&oldid=788022" இலிருந்து மீள்விக்கப்பட்டது