உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gršģilësitz ebélfuri stära ஆண்டு விழா 219 "மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி, உலக உத்தமராவார் என்று பெற்ற தாய்க்கே தெரியவில்லையே! மகனிடம் சத்தியம் கேட்டார்களே! “எத்தனை உத்தமர்கள், உங்கள் முன் அடங்கிக் கிடக்கிறார். களோ! எத்தனை கெட்டிக்காரர்கள், காத்துக் கிடக்கிறார்களோ! காலம்தான் அவர்களை அடையாளம் காட்டும். “எனவே, எல்லா மாணாக்கரையும் தட்டிக் கொடுங்கள். எல்லோரையும் ஊக்குவியுங்கள் எவரையும் அடிக்காதீர்கள்; திட்டாதீர்கள் வாழ்த்தி, வாழ வையுங்கள்” என்பேன். "அதுவே சரி அப்பா, ஊர்க்காரருக்கு என்ன சொல்லுவீர்கள் அப்பா?” என்று கேட்டான் திருவள்ளுவன். “உங்கள் ஊர்ப் பள்ளிக்கூடம் உங்களுக்கே. சென்னையில் இருக்கிற என் பிள்ளை வந்து படிக்கப் போவது இல்லை. 'மதுரை மண்டல அலுவலர் பேரன் இங்கு வந்து படிக்கமாட்டான். திருநெல்வேலியில் இருக்கும் அலுவலர் பிள்ளை அங்கேயேதான் படிப்பான். “உங்கள் ஊர் பள்ளிக்கூடம் உங்களுக்காக, உங்கள் உறவினர்களுக்காக, உங்கள் நண்பர்களுக்காக "உள்ளுர் பள்ளிக்கூடம் நன்றாயிருந்தால், உங்கள் பிள்ளைகள் நன்றாக வளரும்; நன்றாகப் படிக்கும். L 'அதனால் உங்கள் பள்ளிகளைக் கோவில்களுக்கு ஒப்ப நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். “நிறைய பணம் இருப்பவர்கள், நல்ல கட்டடம் கட்டித் தாருங்கள். -- "நிதி குறைவாக இருந்தால், கடிகாரம், நாற்காலி, உலகப் படம், ஏதாவது வாங்கிக் கொடுங்கள். “காசு இல்லாதவர்கள், உதவியாகப் பேசுங்கள். ஊர் முழுதும் பேசும் நல்லசெயல், நடந்துவிடும் என்று சொல்வேன்” என்றேன். “பெற்றோர்க்கு என்ன சொல்வீர்கள்?” என்றான் திருவள்ளுவன். “பெற்றோர் என்று எல்லோரையும் அழைக்கமாட்டார்கள். எத்தனை கோடிசேர்த்துவிட்டாலும் பெற்றோர் என்ற பெருமை, கிடைப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/258&oldid=788043" இலிருந்து மீள்விக்கப்பட்டது