உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 29. மூவாயிரம் ஊர்களில் பகல் உணவுத் திட்டம் சாத்துர் இராமசாமி நாயுடு 12.7. 1956 அன்று முதல் நிகழ்ச்சியாக, வைப்பாறுபாலத்திற்கு அடிப்படைக் கல் நாட்டிய முதலமைச்சர் காமராசர், அடுத்த ஊர் தொடக்கப் பள்ளியில் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அவ் விழாவிற்கும், வேறு சில இலவச உணவு விழாவிற்கும் சாத்துர் இராமசாமி நாயுடு தலைமை ஏற்றார். அடுத்த மாவட்டத்துச் சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விழாவிற்குத் தலைமை ஏற்கச் செய்வானேன்? பள்ளிப் பகல் உணவு தொடங்குவதில் முன்னோடியாக விளங்கிய அந்த ஊர்கள். பலவற்றில், கம்மவார் நாயுடுகளின் செல்வாக்கு அதிகம். அது, பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டத்திற்கு ஆதாயமாகும் என்ற கருத்தில், நாயுடுகளின் தலைவர் ஒருவரை அழைத்து, தலைமை தாங்கச் செய்து, பெருமைப்படுத்தினார். எதிர்பார்த்த பலன் கிடைத்தது. விழாக்களின் போதே, சாதாரண மக்கள் பலர், பொருளாகவும் பணமாகவும் நன்கொடைகளை அளித்தனர். ... " எல்லோருக்கும் இலவச உயர்நிலைப் பள்ளிக் கல்வி முதலமைச்சர் காமராசர் உர்ைகள் எழுச்சியூட்டுவனவாக இருந்தன. + “முன்பு நமக்குப் படிப்பின்மேல் நினைப்பு செல்லவில்லை; கூட நாலு ஆடு மேய்ப்பதைப் பெரியதாக நினைத்தோம். "இப்போது அப் போக்கு மாறிவிட்டது. எல்லோரும்படிக்க் வேண்டும் என்பது நம் ஆசை. இதில் தப்பில்லை. - “எது வன்ரக்கும் படிப்பது? “எட்டாவதுவரை கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்று, நம் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/282&oldid=788069" இலிருந்து மீள்விக்கப்பட்டது