பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் விசாரணை - 335 ஏழைப் பிள்ளைகளும் முன்வந்து தாங்களாகவே கொண்டு வந்தார்கள். இச் செய்தி இலண்டன் டைம்ஸ்’ நாளிதழின் வாராந்திரக் கட்டுரையில் வெளியாயிற்று. கல்வித் திட்டம் கட்சித் திட்டமல்ல கல்வி பற்றிய திட்டங்களை ஆளுங்கட்சியின் தனியுடைமை யாக்கி விடாமல், ஒத்துழைக்கும் பல கட்சியினரின் உதவியையும் பெற்றுக் கொள்ளும்படி, முதலமைச்சர் காமராசர் விரும்பினார். கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அணுகு முறையும் அதுவாக இருந்தது. எனவே, ஊர்களில் கட்சிப் பகைகள் கட்டுக்குள் அடங்கின. அண்ணாவின் அன்பு மக்கள் இயக்கமாக இருந்தபோது, காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களிடம் செல்வாக்குள்ள சில பள்ளிகள், பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி நடத்தின. 1- 11-1957 முதல் பகல் உணவுத் திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டதால், விரைவாகப் பரவிற்று. காஞ்சிபுரம் நகராட்சியின் அப்போதைய தலைவர் திரு.பெருமாள் நாயுடு என்னும் காங்கிரசுக்காரர். துணைத்தலைவர் திரு. ஏ. கே. தங்கவேலு முதலியார் அவ் விருவரும் வேறு சில உறுப்பினர்களும் பகல் உணவு பற்றிக் கலந்து ஆலோசித்தார்கள் தனியார் தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட எல்லாத் தொடக்கப் பள்ளிகளுக்கும் ஒரே மையத்தில் சமைத்து, பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தார்கள். குழு அமைத்தார்கள். திரு. ஏ. கே. தங்கவேலர், திராவிட முன்னேற்றக் கழகப் பெரியவர்களில் ஒருவர் பகல் உணவுக் குழுவின் தலைவர், திரு. பெருமாள் நாயுடு துணைத் தலைவர். திரு. பார்த்தசாரதி என்னும் பொது உடைமைக் கட்சி நகராட்சி மன்ற உறுப்பினர். பகல் உணவுக் குழு உறுப்பினர்களில் ஒருவர். அக் குழு அனைத்துக் கட்சிக் குழு. காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை ஜவுளிக்கடைச் சத்திரத்தில் சமையல். அங்கு இருந்து ஆளுக்கொரு உணவுப் பெட்டியில் ஒவ்வோர் பள்ளிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை சாப்பாடு அனுப்பப்படும். அதைக் கொண்டுபோவதற்காக, மிதிவண்டி ரிக்ஷாக்களை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/372&oldid=788168" இலிருந்து மீள்விக்கப்பட்டது