பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நினைவு அலைகள். "என்னப்பா, நீ கொடுப்பது அதிகழாகவும் உனக்கு வைத்துக் கொள்வது குறைவாகவும் இருக்கிறதே!' என்று ஒருவர் அவரைக் கேட்டாராம். “எனக்கு கையும் காலுமிருக்கிறது; ஊர்ச் சலவை உரிமை என்னுடையது. இவைகூட இல்லாதவர்கள் பள்ளியில் சாப்பிடப் போகிறார்கள். அவர்களுக்கு அதிகம் கொடுப்பதே சரியென்று படுகிறது” என்று மாடசாமி கூறினாராம். பொதுமக்களின் நன்கொடை மதுரை மாநகரத் தெருக்களில் குடி இருந்து, மூங்கிற் கூடை பாய்கள் முடைந்து விற்றுப் பிழைப்போரும், உதவுவதற்குப் பின் அடையவில்லை. அருகில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றிற்கு, பகல் உணவுக்குத் தேவையான மூங்கிற் பாய்களையும் கூடைகளையும் நன்கொடையாக வழங்கினார்கள். 5-1-1959இல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் பகுதியில் பள்ளிச் சீரமைப்பு நடந்தபோது, வாய்க்கால் கரையான் என்று அழைக்கப்பட்ட பழங்குடிப் பெரியவர் ஒருவர், தன்னுார், தொடக்கப் பள்ளியில் நட்டு வளர்ப்பதற்காக, சில தென்னம் பிள்ளைகளைக் கொண்டுவந்து, என் கைகளில் அளித்து, பள்ளித் தலைமையாசிரியரிடம் அளிக்கச் செய்தார். 24-2-1960ളും அன்று காலை அரியலூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடந்தது. மாநாடு கூடியிருந்த திரையரங்கில் நான் நுழைந்ததும் திறந்த வெளியில் ஒரு பக்கமாக ஆனால் எல்லோர் கவனத்தையும் கவரும் வண்ணம் - வெள்ளைப் பூசணிக்காய்கள் மலையெனக் குவிந்திருந்தன. அது என்னவென்று வியப்போடு வினவினேன். “வசதி படைத்த இடைநிலை ஆசிரியர் ஒருவருடைய நிலத்தில் விளைந்தவை இக் காய்கள்: ஒரு வண்டிக் காய்கள்; இவற்றை இங்கு வந்துள்ள பள்ளிகளின் பகல் உணவிற்குப் பகிர்ந்து கொடுக்கச் சொல்லி, இப்படிக் குவித்துள்ளார்” என்று அப் பகுதி ஆய்வாளர் விளக்கினார். “எங்கே அந்த ஆசிரியர்?” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/395&oldid=788193" இலிருந்து மீள்விக்கப்பட்டது