பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ80- நினைவு அலைகள் தேவாரத்தில், இராமையா என்பவர் புதிதாகத் தொடங்கிய தொடக்கப் பள்ளிக்கு கா. சு. திருவள்ளுவன் தொடக்கப் பள்ளி' என்று பெயரிட்டு நடத்தி வருகிறார் திருவள்ளுவன் நினைவு மலர் பலரும் பலவகையில் திருவள்ளுவனின் நினைவைப் போற்றிய போது வாலாஜாபாத்தில் தலைசிறந்த இந்துமதப் பாடசாலையை நடத்தி வந்த திரு.வா. தி. மாசிலாமணி முதலியார் குருகுலம்’ என்ற திங்கள் இதழையும் நடத்தி வந்தார். அதன் 1959 ஆண்டு டிசம்பர் மாதம் வள்ளுவன் நினைவு மலராக வெளியிட்டுச் சிறப்புச் செய்தார். நூற்று எழுபத்தாறு பக்கங்களைக் கொண்ட அம் மலரில் பத்துச் சான்றோர்களின் செய்திகளும், முப்பத்து மூன்று கவிஞர் களின் பாடல்களும் இருபத்தொன்பது கட்டுரைகளும் முப்பத்திரண்டு பக்கங்கள் நிரம்பிய படக் களஞ்சியமும் சேர்ந்துள்ளன. இம் மலர் ஆயிரக்கணக்கில் வெளியாகி கா. சு. திருவள்ளுவன் புகழ் பாடிற்று. அப்பா என்று அன்றைய சமுதாயத்தால் கனிவோடு அழைக்கப்பட்ட வா. தி. மாசிலாமணி முதலியாரும் மறைந்து விட்டார். நானும் ஒய்வு பெற்றுவிட்டேன். திருவள்ளுவனின் தாயார், திருமதி காந்தம்மா 21-11-1984 அன்று மன்றந்ததற்காக நினைவு மலர் ஒன்று வெளியிட வாய்ப்பும் இல்லை. கா. சு. திருவள்ளுவன் பல ஊர்களுக்குச் சென்றவன்; எண்ணற்றவர்களோடு இனிமையாகப் பழகிய சிறுவன். எனவே, அவனது மறைவு எங்களைத் துயரக்கடலில் தள்ளியது போலவே தமிழ் நாட்டில் பொதுமக்களையும் ஆசிரியர்களையும் ஆய்வாளர் களையும் அலுவலர்களையும் வேதனை அடையும்படி செய்தது சிலர், தத்தம் குழந்தையை எங்களுக்குத் தத்து கொடுக்க முன் வந்தார்கள். அவர்களில் சிலர், குழந்தையையே என் இல்லத்திற்கு அழைத்து வந்து விட்டார்கள். அவர்கள் பரிவுக்கு அணை போடுவது கடினமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/417&oldid=788217" இலிருந்து மீள்விக்கப்பட்டது