உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் நினைவுச் சின்னம் - காமராசர் திறந்து வைத்தார் 3.81 வள்ளுவன் நினைவுச் சின்னம் எந்த டி. எல். சி. நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவன், மாலைப் பணத்தைக் கொண்டு, புதிய கட்டடம் கட்டச் சொன்னானோ, அதே பள்ளியில், துத்துக்குடி பெரியவர்கள். கா.சு. வள்ளுவனின் நினைவுச் சின்னம் நிறுவினார்கள். 20-9-1959 அன்று முதலமைச்சர் காமராசர் அதைத் திறந்து வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் திரு. தர்மராஜர் அவர்களோடு ஒத்துழைத்தார். திருவள்ளுவன் மறைந்த சில நாள்களில், அமைச்சர் பக்தவத்சலம் என்னிடம் பேசினார். “முதலமைச்சர், கல்வி அமைச்சர், நான் ஆகிய மூவரும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். “நல்லவர்களுக்குத்தான், சோதனை என்ன செய்வது? மனம் உடைந்துவிடக் கூடாது. துணிந்து, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பொதுத் தொண்டில் முன்னிலும் அதிகமாக மூழ்கி விடுவதே நல்லது. “வெளியில் செல்லாமல், வீட்டுக்கும் அலுவலகத்திற்குமாக இருந்துவிட்டால் மகனை நினைத்துத் துயரப்படுவீர்கள். “முடிந்த அளவு தாராளமாக அழைப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். முடியுமானால், மனைவியையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். 'மனைவியும் வீட்டிலேயே இருந்து எந் நேரமும் வேதனைப் பட்டுக் கொண்டு இருப்பது நல்லதல்ல. இதை உங்கள் இடம் சொல்லும்படி என்னிடம் சொன்னார்கள்” என்றார். அவர்களது பரிவுக்கு நன்றி உடையேன். பத்து நாள்களுக்குள் வந்த வெளியூர் நிகழ்ச்சிக்குச் சென்று விட்டேன். எனக்குப் பிடித்தம்ான நற்செயல்கள் பெருகுமானால், நான் ஒரளவு ஆறுதல் பெறுவேனென்று அய்வாளர்களும், அலுவலர்களும் நினைத்தார்கள். ஆண்டுக்கொரு முறை, ஆய்வாளர்கள், இரு மாநாடுகளில் கூடுவார்கள். மதுரை மண்டல ஆய்வாளர்கள் ஒரு மாநாட்டிலும், கோவை மண்டல ஆய்வாளர் பிறிதொரு மாநாட்டிலும் கூடுவது வழக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/419&oldid=788219" இலிருந்து மீள்விக்கப்பட்டது