பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவு அலைகள் அவர் கேட்கவில்லை. நின்றபடியே உரையாற்றினார். அடிவயிற்றை ஒரு கையால் தாங்கிக் கொண்டே பேசினார். வரவேற்புரைக்குப்பின் அமைச்சர் தொடக்க உரை ஆற்றினார். சி. சுப்பிரமணியம் உரை வரவேற்புரையில் ஆசிரியர்கள் சார்பில் எந்த நிர்வாகத்தின் கீழ் பணி புரிந்தாலும் ஒரே தகுதியுடைய ஆசிரியர்களுக்கு ஒரே சம்பள விகிதம் என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டது. அமைச்சர் தமது உரையில் அதைக் குறிப்பிட்டு, “சென்னை மாநில அரசு இதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதால் தான் அரசு ஊழியர்களுக்கான, ஊதியக் குழுவுடன் தனியார் உள்ளாட்சித்துறை நிர்வாகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பற்றிய பரிந்துரைகளையும் கொடுக்குமாறு அக் குழுவைக் கேட்டு இருக்கிறோம். "அப் பரிந்துரைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம். அக் குழு என்ன பரிந்துரைத்தாலும் அவற்றை அப்படியே அரசு ஏற்றுக் கொள்ளும் என்று உறுதி கூறுகிறேன்” என்று அவையோர் கைதட்டி வரவேற்க அறிவித்தார். அறுவை செய்த இடத்தில் வலித்து இருக்கும்போலும். அடுத்த வினாடி 'அப் பரிந்துரைகள் உங்கள் எதிர்பார்ப்புக்கு வரவில்லை என்றால் நீங்கள் வேறோர் அமைச்சரைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றார். அமைச்சர் முடிப்பதற்குள அவையான ஒரு மூலையில கிண்டலான கைத்தட்டல், அபஸ்வரமாக ஒலித்தது. அமைச்சருக்குப் பிறகு மாநாட்டுத் தலைவர் திரு.இராமையாத் தேவர் உரை ஆற்றினார். * தொடக்கத்தில் அமைச்சரின் மதி நுட்பம், செயல்திறன் முதலியன பற்றி உரிய பாராட்டைக் கூறினார். அவையோர் மகிழ்ச்சி கொண்டனர். அவ் வேளை அவரும் தம்மை மறந்து ஒர் அபஸ்வரத்தில் ஈடுபட்டார் “இவ்வளவு ஆற்றல் மிக்கவரும் நம்பால் நல்லெண்ணம் உடையவருமான கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. சுப்பிரமணியமே, நமக்கு உரிய ஊதியம் வாங்கித்தர முடியாது. கல்வித்துறை பொறுப்பைவிட்டு விலகி விடுவதென்றால், நாம் வேறு யாரை நம்பித் தொடர்ந்து பணியில் இருப்பது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/453&oldid=788257" இலிருந்து மீள்விக்கப்பட்டது