பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்கள் ஊக்கம் 469 “பச்சடி நாக்கில் தடவினதும் உள்ளேபோய்விடும். முருங்கைக் காயை வழித்துத்தான் உண்ண வேண்டும். மென்று தின்றால் இன்னும் சுவை!” நான் குறுக்கிடுவேன் “பொங்கலன்று எளியவர்கள் கூடத் தவறாது திண்பது எது?” “கரும்பு.” "கரும்பை அம்மாவோ, பாட்டியோ சீவித் தரும்வரை காத்திருப்பீர்களா?” "மாட்டோம். எங்கள் பற்களால் கடித்துப் பட்டையை உரித்துப் போட்டுவிட்டு மென்று தின்போம்!” “எத்தனை முறை மெல்லுவீர்கள்?” 'அய்யா! மன்னிக்கவேண்டும். கேள்வி பொருத்தமாக இல்லை. எதுவரை மெல்லுவீர்கள் என்று இருக்கவேண்டும்?” -- “சரி, எதுவரை மெல்லுவீர்கள்?” “சாறெல்லாம் வற்றும்வரை மெல்லுவோம்.” "பாடங்களில் பச்சடி போன்றது உண்டு. அவற்றைத் தொட்டாலே போதும். “காய்கறிகளைப் போன்றவை உண்டு. அவற்றை இரண்டொரு முறை மென்று உண்பீர்கள். கரும்புபோல் கடினமானவற்றை என்ன செய்யப் போகிறீர்கள்?” = “பாடம் ஏறும்வரை திரும்பத் திரும்பப் படிக்கப் போகிறோம்!” “நீங்கள் சொன்னபடி செய்தால், எதில் தேர்ச்சி பெறலாம்? எதில் இடறி விழலாம்?” - “எல்லாவற்றிலுமே தேர்ச்சி பெறலாம்.” “என்ன இவ்வளவு துணிச்சலாகச் சொல்லுகிறீர்கள்?” “தேர்ச்சிபெற எந்தப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு கேட்பது இல்லையே. எதிலாவது தொண்ணுாறு கேட்பது உண்டா? இல்லை.” 'நாற்பதுக்குமேல் எதிலும் கேட்பதில்லை. சிலவற்றில் முப்பது மதிப்பெண் பெற்றாலும் போதும் என்கிறார்கள், அதனால் துணிவோடு சொல்லுகிறோம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/508&oldid=788317" இலிருந்து மீள்விக்கப்பட்டது