உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 நினைவு அலைகள் கற்பிக்கும் நேரம் எப்படி? ஊருக்கு ஊர் மாறுபட்டது; கற்க வருவோர் வசதிப்படி கற்பிக்கும் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். படிப்போர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பதைக் கவனித்து, அவ்வளவு நேரம் மட்டுமே சொல்லிக் கொடுத்தார்கள். வயது வந்தோர், பள்ளிக்கு வருவோர், இருவர் மூவராயினும் பள்ளி நடக்கும். இப்படிப் பத்து லட்சம் தொண்டர்கள் சிறிய பெரிய வகுப்பு களை நடத்தி, எட்டு வயதுக்கு மேற்பட்டு, ஐம்பது வயதுக்குட்பட்ட ஆண் பெண் அனைவரையும் எழுத்தறிவு உடையவராகச் செய்து விட்டார்கள். ரஷ்யாவில் பெரியார் தந்தை பெரியார் 1932இல் சோவியத் நாட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார். * அவர் போற்றியவைகளில் சிறப்பானவை மூன்றாகும். எழுத்தறியாமையை ஒழித்தது; வேலையில்லாத் திண்டாட் டத்தை நீக்கியது: விபசாரத்தைப் பழங்கதை ஆக்கியது. பொங்கி எழும் மனமாற்றத்தால் முளைக்கும் எழுத்தறிவு, எளிதில் பட்டுப்போகாது. எனவே, புதிதாக எழுத்தறிவு பெற்றோர் தொடர்ந்து செய்தித் தாள்களையும் நூல்களையும் படிக்கத் தொடங்கினார்கள். வீட்டிலுள்ள பெரியோர்கள் படிப்பதைப் பார்த்துச் சிறுவர் சிறுமியர்களும் இயற்கையான படிப்பு ஆர்வத்தைப் பெற்றார்கள். தொடர்ந்து படித்தார்கள். அரசும் ஒரு பக்கம் எழுத்தறிவை வளர்த்து எல்லோரையும் எழுத்தறிவு பெற்றவர்களாகச் செய்ததோடு நிறைவு கொள்ளாமல், அத்தகையோர் தொடர்ந்து பகுதி நேரம் கற்க ஏற்பாடு செய்தது. இன்று அந் நாட்டில் 250க்கும் மேற்பட்ட தனிப் பயிற்சிகளைத் தொழில் புரிந்துகொண்டே, அஞ்சல் வழியிலோ, பகுதிநேர வகுப்பின் வாயிலாகவோ பெற முடியும். இதன் விளைவு என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/523&oldid=788334" இலிருந்து மீள்விக்கப்பட்டது