பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485 நினைவு அலைகள் மொழி பெயர்ப்புத் துறை ஒரு சோவியத் மொழியில் இருந்து பிற சோவியத் மொழிகளுக்கு உடனுக்குடன் மொழி பெயர்த்து வெளியிடு வதற்கும் பிற நாட்டு மொழிகளில் இருந்து மொழி பெயர்த்து வெளியிடுவதற்கும் பெரிய அளவில் அமைப்புகள் உள்ளன. 'காலமெல்லாம் கற்போம். எல்லோர் சிந்தனைகளையும் அறிவோம்’ என்பதே சோவியத் அறிவு நாட்டத்தின் தன்மையாகும். இந்தியத் துதுக் குழுவினராகிய நாங்கள், படிக்கும் வயதினர் அனைவரும் பள்ளிக்குப் போவதைக் கண்டோம். தொழிற்சாலையில் பள்ளி பெற்றோர் வேலைக்குச் சென்றால் அத் தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ பாலர் பள்ளிகள் இருப்பதால் கைக் குழந்தைகளை அங்குக் கொண்டுபோய் விட்டு வைக்கிறார்கள். மாலை வீடு திரும்பும்போது, குழந்தையை எடுத்துப் போகிறார்கள். எனவே, குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு சிறுவனையோ, சிறு மியையோ வீட்டில் நிறுத்தி வைத்து, ஒர் ஆளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கெடுக்க வேண்டியதில்லை. படிப்பவர்கள் எல்லோரும் ஒரே வேகத்தில் கற்பது அரிது. சிலர் மெல்லக் கற்பார்கள். வேறு சிலர் சட்டென்று கற்பார்கள். சோவியத் கல்வி முறை, இப் போக்கைப் பற்றிப் பாராமுகமாக இல்லை. - கூடுதல் பாடம் மெல்லக் கற்போருக்காகக் கூடுதலாகச் சொல்லிக் கொடுத்தல் இன்றியமையாததாகும். சோவியத் கல்வி முறை இதற்கு இடம் வைத்திருக்கிறது. ஒவ்வொரு பாடம் முடிய முடிய, அவ்வப்போது தேர்வு நடத்துகிறார்கள். அதனால், சில வாரங்களில் எவர் எவர், எதில் எதில் மெல்லக் கற்பவர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/525&oldid=788336" இலிருந்து மீள்விக்கப்பட்டது