பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 நினைவு அலைகள் எப்போதும் ஆராய்ச்சி மற்ற நேரங்களில் ஆய்வுக்கூடச் சாவி பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்னும் சோம்பேறி முறை அமெரிக்காவில் இல்லை. நான் முதல்முறை அமெரிக்கா சென்றிருந்தபோது, எனது மாமன் மகன் டாக்டர் நெ. சு. ஞானப்பிரகாசம், அமெரிக்காவில் அட்லாண்டா என்னும் நகரில் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். என் விருப்பப்படி, அந் நகருக்குச் சென்று அப் பல்கலைக் கழகத்தின் பள்ளிகளையும் பார்க்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவரோடு அவரது இல்லத்திலேயே சில நாள்கள் தங்க நேர்ந்தது. முதல் நாள் இரவு ஏழு மணி இருக்கும். “ஆய்வுக் கூடத்தைப் பார்க்கலாமா?” என்று ஞானப்பிரகாசம் கேட்டார். “இந் நேரத்தில் அங்குச் செல்ல முடியுமா?” என்று கேட்டேன். செயல் மூலம் எனக்குப் பதில் கூறினார். என்னைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். வாயிற் காப்போர் ஞானப்பிரகாசத்தைக் கண்டதும், தலை வாயிற் கதவைத் திறந்து விட்டார். உள்ளே சென்ற ஞானப்பிரகாசம் தம்மிடம் இருந்த சாவியைக்கொண்டு தமது ஆய்வுக் கூடத்தைத் திறந்து காட்டினார். தாம் நடத்தி வரும் ஆய்வு பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பத்து மணித்துளிகள் ஒடியிருக்கும். “டாக்டர், இன்னுமா வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?" எனறு கேட்டபடியே ஒருவர் உள்ளே நுழைந்தார். ஞானத்தோடு கை குலுக்கினார். ஞானம் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தாம் வீட்டிற்குச் சென்று சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் வந்திருப்பதாக விளக்கிச் சொன்னார். i. தோழமை உணர்வ வந்தவர் யார்? அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுள் ஒருவர், *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/569&oldid=788384" இலிருந்து மீள்விக்கப்பட்டது