பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி - 1965 541 இடத்தை முடிவு எடுத்தோம் பல்கலைக் கழகத்திற்கு இடம் தேடும் படலம் வந்தது. முதலில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் திரு. அம்புரோஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதி நான்கைந்து இடங்களைத் தேர்ந்து எடுத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அப் பணியை நன்றாகக் கவனித்தார். தமக்குக் கீழ் இருக்கும் அலுவலர்களிடம் அதை விட்டுவிடவில்லை. அவர்கள் பரிந்துரையின் பேரில் மதுரையிலும், மதுரையைச் சுற்றியும் ஆறு இடங்களைப் பொறுக்கி, அவற்றைத் தாமே நேரில் பார்வையிட்டார். ஒவ்வொன்றின் தாரதம்மியம் பற்றியும், குறிப்புகளை ஆயத்தம் பண்ணிக் கொடுத்தார். மேலும், குழு அவ் விடங்களைப் பார்வையிட விரும்பியபோது அவரே உடன் வந்து ஒவ்வொன்றையும் காட்டி உதவினார். குழு விருப்பு, வெறுப்புகளுக்கு ஆளாகவில்லை. அறிவியல் அடிப்படையில் ஒவ்வொன்றின் தகுதியையும் மதிப்பிட்டது. மண்வளம், நீர்வளம், கிடைக்கக்கூடிய பரப்பு, விரிவாக்கும் சாத்தியக்கூறு முதலியவற்றை அளவுகோல்களாகக் கொண்டு தேர்ந்தெடுத்தது. இறுதியில் இப்போது மதுரை காமராசர் பல்கலைக் கழக வளாகமாக இருக்கும் பெரும் பரப்பைத் தேர்ந்து எடுத்தோம். 56. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி - 1965 மதுரைப் பல்கலைக் கழகம் - அரசு அலுவலர் குறுக்கீடு கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரைப் பல்கலைக் கழகத்தை நிறுவும்படி அரசுக்குப் பரிந்துரை செய்தோம். அரசு மட்டத்தில் அலுவலர் நிலையில், புதிய பல்கலைக் கழகம் தேவையில்லை; மதுரைக்கு அருகில் ஒரு விவசாயக் கல்லூரி தொடங்கியுள்ளோம்; அது நிலைபெறட்டும். அப்புறம் அதையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/580&oldid=788397" இலிருந்து மீள்விக்கப்பட்டது