உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 நினைவு அலைகள் “சில பிற நாட்டு மாணவர்களின் நிலையை நேரில் அறிந்து வந்தவன் என்ற நிலையில், நீங்கள் யாருக்கும் இளைத்தவர்கள் அல்லர்’ என்று உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். “கல்லூரியில் இருக்கையில், அந்தப் பாடம் இவ்வளவு இருக்கலாம். அந்தப் பாடம் அவ்வளவு தேவையில்லை. பிறிதொரு பாடம் தேவையேயில்லை என்று தாராளமாகக் கருத்தினைத் தெரிவியுங்கள். “அதற்குரியவர்கள் பாட முறையை வகுத்துவிட்ட பிறகு, அதில் தேர்ச்சி பெறுவதில் முனைப்பாய் இருங்கள். “தேர்ச்சி பெற்ற பிறகு, உங்கள் அறிவினை, வாய்ப்புகளைச் சமுதாய நலனுக்குப் பயன்படுத்துங்கள். "சாலையோர மரம், நட்டவர்க்கு மட்டுமன்றி, மற்றவர்க்கும் நிழல் தருவதுபோல், நீங்களும் சாதிகளுக்கு அப்பாற்பட்டு, பிற பிரிவு உணர்ச்சிகளைக் கைவிட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் வழிகாட்டிகளாக விளங்கிச் சிறந்த வாழ்வு வாழுங்கள். "எல்லோரும் வாழ, நன்றாக வாழ, ஒன்றாக வாழ உதவுங்கள்.” இந்த என் உரையைப் பெரியாரின் நாளிதழ் ஆகிய விடுதலை’ விரிவாக வெளியிட்டது. அதைப் பார்த்த, தஞ்சை நண்பர்கள் சிலர், அதைப் பெரியார் ஒரு கலங்கரை விளக்கம்’ என்ற தலைப்பில் சிறுநூலாக வெளியிட்டுப் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இது எனக்கு அப்போது தெரியாது. புதுதில்லியில் அலுவல் பார்க்கையில் அந் நூலின் படி ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இலவச வெளியீடு, எனக்குப் ւյտ*»տպւն, சில வட்டாரங்களில் காழ்ப்புணர்ச்சியையும் கிளறிவிட்டது. பக்தவத்சலம் மகிழ்ந்தார் ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரி விழாவுக்குச் சில நாள்கள் கழித்து முதலமைச்சர் மாண்புமிகு பக்தவத்சலத்தைக் காண நேர்ந்தது. அக் கல்லூரி நிகழ்ச்சி பற்றிச் சுருக்கமாகக் கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/617&oldid=788437" இலிருந்து மீள்விக்கப்பட்டது