உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 நினைவு அலைகள் இல்லை; விழா முடிந்து, மேடையை விட்டு இறங்கும்போது, என் கையைப் பிடித்து நான் புதுதில்லியில் எப் பணியில் இருக்கிறேன் என்பதுபற்றிக் கனிவோடு வினவினார். திருமதி. செளந்திரம் ராமச்சந்திரன் எனக்காகப் பதில் கூறினார். “சுந்தரவடிவேலு, நீ இதுவரை என்னை வந்து காணாதது சரியல்ல; வந்து பார்” என்று டாக்டர் ராதாகிருஷ்னன் ஆணையிட்டார். சுற்றியிருந்தோரில் பலர் ஏதோ பறிகொடுத்ததுபோல், தோற்றம் அளித்தனர். அது கிடக்கட்டும். தேன் துளிகள் சிறந்த சொற்பொழிவாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவ் விழாவில் ஆற்றிய உரையின் சில தேன்துளிகளையாவது உங்களுக்கு அளிக்க வேண்டாமா? டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வியின் சிறப்பையும், அதன் இன்றியமையாமையையும், அது தன் மக்களை உருவாக்கும் குறிக்கோளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதையும் அழகு ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார். இடையே, - நல்லாசி ரியர் யார்? “திறமையான நல்ல பயிற்சி உடைய ஆசிரியர்கள் தேவையே, இருப்பினும் குருமார்களின் புலமையைவிட, பயிற்சியைவிடச் சிறந்தது வேறு ஒன்று இருக்கிறது. "ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உணர்வே எல்லாவற்றிலும் சாலச் சிறந்ததாகும். ஆசிரியர்களுடைய அணுகுமுறை கல்விக்கு உயிர்நாடியாகும். == “உங்களால் படிக்க முடியாது; முன்னேற முடியாது என்று ஊக்கக் குறைவை ஊட்டும் ஆசிரியர், நல்லாசிரியர் அல்லர். 'முடியும் முயன்றால் முடியும் என்று ஊக்கப்படுத்தும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர். 'தன்னிடம் கற்கும் மாணவர்கள் அனைவரிடமும், அன்பும், பரிவும், ஊக்கமும் காட்டும் ஆசிரியர்களாகச் செயல்படுவோரே நல்லாசிரியர்கள்” என்று ஆசிரியர்களுக்கு இலக்கணம் வகுத்துத் தந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/641&oldid=788464" இலிருந்து மீள்விக்கப்பட்டது