பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B60 நினைவு அலைகள் கிடந்தேன். பின்னர் அண்ணாசாலை அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த நாவலரின் இல்லத்துக்கு மீண்டும் சென்றேன். நாவலர் விரைவாக மாடி ஏறியதைக் கண்டேன். அவரது துணைவியார் திருமதி. டாக்டர் விசாலாட்சி அம்மையார், “பிற்பகல் வந்து பாருங்களேன்” என்று கூறினார். நாவலர் உறுதியாக இருந்துவிட்டார் அப்படியே சென்றேன். அமைச்சர் வரவேற்பறையில் அமர்ந்து இருந்தார். அவரோடு அவரது வாழ்க்கைத் துணைவியாரும், இரா. செழியனும் இருந்தனர். நான் காலை முதல் அமைச்சரைக் காண முயல்வதைப் பற்றி, அமைச்சரே குறிப்பிட்டுக் காரணத்தை வினவினார். தந்தை பெரியார் சொல்லி அனுப்பிய செய்தியைக் கூறினேன். “இன்று காலை, கலைஞரே நேரில் என்னை முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். நான் 'முடியாது’ என்று சொல்லிவிட்டேன். “சில மணித்துளிகளில் திரு. இராசாராம் பெரியாரின் செய்தியைக் கொண்டு வந்தார். கலைஞருக்குக் கூறிய பதிலையே சொன்னேன். m "அதைக் கேள்விப்பட்ட பெரியார் தாமே நேரில் வந்து என்னைக் காண விரும்புவதாகவும், அதற்கு எனக்கு வசதியான நேரத்தைச் சொல்லும்படியும் கேட்டார். அய்யா வரவேண்டாம். நானே அய்யாவை வந்து பார்க்கிறேன். அதற்கு இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு வசதிப்படுமா?’ என்று கேட்டேன். அவர் சரி என்றார். “இன்னும் சில மணித்துளிகளில் நான் பெரியாரைக் காணப் புறப்படப் போகிறேன்” என்று கல்வியமைச்சர் நாவலர் என்னிடம் கூறினார். “பெரியாரைப் பேட்டி காண்பதற்குமுன் உறுதியான முடிவுக்கு வரவேண்டாம். தங்கள் மனக்கதவு திறந்தே இருக்கட்டும். “பேட்டிக்குப் பிறகும் முன்னர்க் கூறிய நிலையை உறுதிப் படுத்த எண்ணினால், பெரியாரிடம் பளிச்சென்று மறுப்புச் சொல்லிவிடாதீர்கள். அவ்வளவு பெரியவருடைய மனம் புண்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று நான் நாவலரிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/679&oldid=788505" இலிருந்து மீள்விக்கப்பட்டது