பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sebgyfrif beo-opsomassifiso usodoenevë sipsin seosuus- uplyuunni? 717 தவிப்பானேன். இதற்கு ஒரு வழி காண உங்கள் உதவியை நாடுகிறேன்” என்று அவரிடம் கூறினேன். அய்யங்கார், “இதில் பிழை ஏதும் செய்யாத மாணவிகள்தான் தேவையில்லாமல் அல்லல்படுகிறார்கள்; ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் தலைவர் பிடிவாதக்காரர். என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்” என்று பதில் கூறினார். நான், “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அக் கல்லூரியில் படிக்கிறவர்கள் பற்றிக் சில தகவல்களைத் தங்களிடம் கேட்கட்டுமா?” என்றேன். 暉 a T. ■ H “கேளுங்களேன்” என்றார். "ஷெட்டியூல்டு வகுப்பு மாணவியர் எத்தனை பேர் = # # ད།། ཟད་། # Lā. El இருப்பார்கள்?' என்று கேட்டேன். “சிலரே” என்று பதில் கூறினார். “பின்தங்கிய வகுப்பு மாணவியர் நிறைய பேர் இருப்பார்களா?” என்பது என்னுடைய அடுத்த கேள்வி. “அவர்களும் சிலரே” என்று அய்யங்கார் பதில் உரைத்தார். "அப்படியானால் அக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் மிகப் பெரும்பாலோர் பிராமண ஜாதிகளையோ, பிராமணரல்லாத முற்போக்கு ஜாதிகளையோ சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படை இவர்களில் எழுநூறு பேர்களை நடுத்தெருவில் திண்டாடவிட்டு, வேடிக்கைப் பார்க்கப் போகிறீர்களா? அல்லது தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்றப் போகிறீர்களா? தயவுசெய்து யோசித்துப் பாருங்கள் நாளை மீண்டும் தொடர்பு கொள்வோம்; அப்போது வழி காட்டுங்கள். உங்கள் உதவியோடு அப் பெண்களின் படிப்பைக் காப்பாற்றுவோம்.” இப்படி வேண்டிக் கொண்டேன். திரு. அய்யங்கார் கல்லூரி நிர்வாகத்தின் தலைவரோடு பேசி விட்டு மறுநாள் காலை என்னோடு தொடர்பு கொள்வதாகக் கூறினார். அப்படியே மறுநாள் காலை 8.45 மணிக்கே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். நிர்வாகத்தினரின் கோபம் “இன்று காலை அவரோடு பேசிவிட்டேன். நீங்கள் சொன்னதை அப்படியே சொன்னேன். அரசின் ஈடுதொகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/736&oldid=788569" இலிருந்து மீள்விக்கப்பட்டது