உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் பயணத்தைக் கைவிட்டேன் - 759 'உன் உடம்பு இப்படி இருக்கையில் நான் வெளிநாடு செல்வது வீரமாகத் தோன்றலாம். விவேகமாக இருக்காது. எனவே, இன்றிரவோ, நாளை காலையோ வான ஊர்தி வழியாகச் சென்னைக்கு வந்துவிடுகிறேன்” என்று கூறினேன். “அச்சம் வேண்டாம், கவலை வேண்டாம், சென்று வாருங்கள்” என்று மீண்டும் காந்தம்மா வற்புறுத்தினார். == 'உன் உடல்நிலை கெட்டிருக்கும் நிலையில் உன்னோடு உனக்கும் துணையாக இருக்க வேண்டாமா? நாளை சென்னைக்குத் திரும்புகிறேன். இன்று இரவு விமான நிலையத்துக்குக் கார் அனுப்பி வை” என்று முடிவாகச் சொன்னேன். சென்னைக்குத் திரும்பினேன் அடுத்த நொடி இந்திய சோவியத் கலாசாரக் கழகத்தின் தலைமைச் செயலகத்தோடு தொடர்பு கொண்டேன். தமிழ் நாட்டைச் சேர்ந்த என் இனிய நண்பர் திரு. நாராயணன் அக் கழகத்தின் பொதுச் செயலர்களில் ஒருவர். அவர் என் நிலையைப் புரிந்துகொண்டு ஆவன செய்தார். புதுதில்லியில் இருந்த சம்பந்தப் பட்ட அலுவலர்கள் என் நிலையைப் புரிந்து கொண்டு ஒத்துழைத் தார்கள். எனவே, அன்றிரவே சென்னைக்குத் திரும்ப முடிந்தது. அதுவரை முள்படுக்கையில் புரளுவதைப் போல் இருந்தது. மீனம்பாக்கம் வந்து இறங்கியதும் தொலைவிலேயே என் தம்பி மகன், டாக்டர் பாண்டியன் வந்திருப்பதைக் கண்டேன். அது வழக்கத்துக்கு மாறானது. எனவே என்ன ஆயிற்றோ என்று திடுக்கிட்டேன். சில நொடிகள் என்னை அடையாளம் கண்டு கொண்ட பாண்டியன் புன்முறுவல் பூத்தார். அவரது தோற்றம் நம்பிக்கை ஊட்டியது. விமான நிலையத்துக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, 'நன்றாய் இருக்கிறார்கள்’ என்று பாண்டியன் உரத்துக் கூற, நான் நிதானம் அடைந்தேன். காந்தம்மா மூச்சுத் திணறல் குறைந்திருந்ததே ஒழிய, முழுமையாகக் குணமாகவில்லை. நான் வந்து சேர்ந்தது அவருக்குத் தெம்பு ஊட்டியது முகத்தில் தெரிந்தது. சில நாள்கள் துன்பப்பட்டதும் மெல்ல மெல்லக் குணமடைந்தார். - மீண்டும் மாஸ்கோ அழைப்பு 1982 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை மாஸ்கோவிலிருந்து அழைப்பு வந்தது. அவ் வழைப்பு வந்தபோது நான் கயாவில் நடந்த அனைத்து இந்திய, சோவியத் கலாச்சாரக் கழக மாநாட்டிற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/778&oldid=788615" இலிருந்து மீள்விக்கப்பட்டது