உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 94. தலைமை நிர்வாகி துணைவேந்தரே துணைவேந்தரே ஒரு பல்கலைக் கழகத்தின் தலைமை நிர்வாகியாவார். அவர் முழுநேர அலுவலரும் ஆவார். அவர் பல்கலைக் கழக விவகாரங்கள் பற்றி ஆட்சிக் குழுவுக்கு வழிகாட்ட வேண்டியவர். ஆட்சிக் குழுவுக்குத் தலைவரும் அவரே. அந்நிலையில், ஆட்சிக் குழுவின் விவாதங்களை முறைப்படுத்தி ஒரு முடிவுக்கு வர உதவவேண்டியது அவரின் தலையாய கடமை. ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு என்ன? குழுவின் முன் வைக்கப்பட்டுள்ள செயற்குறிப்புகள் பற்றித் தங்கள் கருத்துகளை ஒளிக்காமல் எடுத்துச் சொல்வதும் பலருடைய கருத்துகளையும் அறிந்த பிறகு மிகப் பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளக் கூடிய முடிவுகளை உருவாக்க உதவுவதும் ஆகும். ஆட்சிக் குழுவில் எவர் பெரியவர்? துணைவேந்தரைப் பெரியவராக ஏற்றுக்கொண்டு செயல்படுவதே முறை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை நான் கண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் துணைவேந்தராக இருந்தபோது, ஒரு கால கட்டத்தில் டாக்டர் பி. வி. செரியன் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தார். அப்போது டாக்டர். செரியன் சட்டமன்ற மேலவைத் தலைவராக விளங்கினார். மேலவையில் தலைவராக இருந்தவர் அதே மேலவையில் வெறும் உறுப்பினராக விளங்கிய டாக்டர். ஏ. எல். முதலியாரைப் பல்கலைக் கழக வளாகத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டார். வெளியிலே இருந்த பதவி பெரியதாயினும் பெரும் மரியாதைக் குரியதாயினும் பல்கலைக் கழகத்திற்குள் துணைவேந்தரைத்தான் பெரியவராக மதித்து விவாதிப்பார். டாக்டர் யூ. கிருஷ்ணாராவ் வழிகாட்டினார் மற்றொரு காலகட்டத்தில், டாக்டர் யூ. கிருஷ்ணாராவ் சட்டமன்றப் பேரவைத் தலைவர் - பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் உறுப்பினராக இயங்கினார். ஆட்சி உலகில் துணை வேந்தருக்குச் சட்டமன்றத் தலைவரின் பின்னால்தான் இடமுண்டு. இருப்பினும், பல்கலைக் கழகத்திற்குள் துணைவேந்தருக்கே முதலிடம் கொடுத்துச் செயல்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/805&oldid=788645" இலிருந்து மீள்விக்கப்பட்டது