பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஜம் என் படத்தைத் திறந்தார் 57 "நீங்கள் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அரசு ஊழியத்தில் உள்ள நான், என் செல்வாக்கை எவருக்காகவும் பயன்படுத்தக்கூடாது. "அதோடு, திரு. சீனிவாச வரதனை எதிர்த்து முன்னாள் அரசு அலுவலர் ஒருவர் வெற்றி பெற முடியுமா என்று அச்சப்படுகிறேன். "நீங்கள் தேர்தலில் குதிக்கத்தான் வேண்டுமா?” என்று கூறி, தடுக்க முயன்றேன். பலிக்கவில்லை. திரு. சந்தானகிருஷ்ண நாயுடு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு. சீனிவாசவரதனோடு போட்டியிட்டுத் தோற்றார். நாயுடுவுக்கு வந்த ஞானம் சில நாள்களில் திரு. நாயுடு என்னைக் காண நேர்ந்தது. “உங்கள் வாய்க்குச் சர்க்கரை தான் போட வேண்டும். 'முப்பதாண்டுகளுக்கு மேலாக, எத்தனையோ பேர்களுக்கு அவ்வப்போது உதவினேனே! அவர்கள் அதற்குக் கைம்மாறாகத் தங்கள் வாக்குகளை அளித்து என்னை ஆதரிப்பார்கள் என்று கணக்குப் போட்டது தவறு. 'நன்றி, அரிய உணர்வு என்பதை நீங்கள் இளம் வயதிலேயே புரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்” என்று பாராட்டினார். 'அனுபவத்தை நம் மக்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பது தொடர்கதை. ஒரு பக்கம் என் நீண்ட நாளைய நண்பர் என் நியமனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தால், இன்னொரு பக்கம், தமிழ்ப் பற்றாளர் சிலர், தேவைக்குமேல் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டார்கள். சென்னை வண்ணாரப் பேட்டையில், சர். தியாகராயர் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரி முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது, நீதிக் கட்சியைத் தோற்றுவித்த மூவரில் ஒருவராகிய வள்ளல் தியாகராய செட்டியாரின் பெயரால் நடக்கிறது. அவ் வள்ளலுக்கு உறவினரான, திரு. இராமசாமி செட்டியார் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர்களில் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/97&oldid=788707" இலிருந்து மீள்விக்கப்பட்டது