பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நிலையும் நினைப்பும் காரில் விட ஒரு உயர்ந்த ஊர்தியில் அவனை உராய்ந்து கொண்டு செல்லுவதுபோல் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைக் கிளறும். அது செல்லுகிறவனை அழிக்கும் வேலையை உருவாக்கும். இது சகஜம்! அவன் நிலை அவனுக்கு அத்தகைய நினைப்பைத் தருகிறது. வளமுள்ள தமிழ்நாட்டைப் பார்த்து, வறண்ட நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் தமிழ் நாட்டின் செல்வத்தைப் பார்த்து இப்படி எண்ணுவதிலிருந்து தப்பியிருக்கமுடியாது. பட்டப்பகல் பனிரண்டு மணி நேரத்தில் சென்னை தார் ரோட்டில் காரில் செல்லுகிறவனைப் பார்த்து, நடந்து செல்லுகிற ஏழை எண்ணியதைப் போலத்தான் அவர்கள் தமிழர்களைப் பார்த்து எண்ணியிருக்க முடியும். அந்தக் காலம் இருக் கட்டும். அண்மையில் பர்மாவை ஜப்பானியர் பிடித்துக்கொண்டபொழுது, செல்வமுள்ள பர்மா வைப் பார்த்து ஜப்பானியர்கள் என்ன எண்ணி னார்கள், என்ன எண்ணியிருப்பார்கள், என்ன எண்ணியிருக்க முடியும்? பர்மா அரிசியைப் பார்த் ததும் இது நல்ல அரிசியாய் இருக்கிறதே, உங்க ளுடைய நெற்களஞ்சியங்களைக் காட்டுங்கள் றிருப்பார்கள். வெள்ளியைப் பார்த்ததும் உங்க ளுடைய இரும்புப் பெட்டியைக் காட்டுங்கள் என் றிருப்பார்கள்.பயந்த பர்மியர்கள் தங்கள் நெற் களஞ்சியங்களையும், இரும்புப் பெட்டிகளையும் ஜப்பா னியர்களுக்குக் காட்டியிருப்பார்கள். காட்டத் தவ றியவர்களை ஜப்பானியர்கள் சுட்டுத் தள்ளியிருப் பார்கள். இதுதான் நடந்திருக்கும். இதேபோல் என