பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நிலையும் நினைப்பும் கங்களிலே வேறுபாடு இருக்கலாமே ஒழிய, எண் ணிய எண்ணங்களில் இம்மியளவும் மாறுபாடு இல்லை. அந்த விபரீத எண்ணங்களின் விளைவுதான் தமிழகத்தின் கானகங்களில் கங்கைக் கரையில் உலவியவர்களின் கூட்டம், யாகம், ஓமப் புகை வேத ஒலி கேட்கும் நிலை முதலியன தோன்றின; தமிழில் ஆரியம் கலந்தது; தமிழகத்துடன் ஆரியா வர்த்தம் ஐக்கியமானது. பிறகு கேட்கவேண்டுமா? பாசறைகளுக்குப் பக்கத்தில் பர்ணசாலைகள், அரண்மனைகளுக்குப் பக்கத்தில் ஆஸ்ரமங்கள், மன்னர்களுக்குப் பக்கத்தில் மாடல மறையவர்கள் என்ற நிலை ஏற்பட்டது. தனிநிலை கெட்டது. நிலை கெடவே நினைப்பும் கெட்டது; அயல் நாட்டார். கண்டு கேலிசெய்கிற அளவுக்குக் கெட்டது. இப்பொழுது நீங்கள் கேட்கலாம், ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தமிழர்களுக்குத் தனிப்பண்பு இருந்ததாகக் கூறினீர்களே, அந்தத் தனிப்பண்பு ஜீவித்திருக்க முடியாமல் போனதற் குக் காரணம் என்ன? அயல் நாட்டார் தங்களுடைய நினைப்பைக் கண்டு கேலி செய்கிற அளவுக்குத் தமி மூர்கள் தங்களுடைய தனிப் பண்பு கெட ஏன் பார்த் துக்கொண் டிருந்தார்கள்?' என்று. நான் உங்க ளுக்குக் கூற ஆசைப்படுகிறேன்: "நிலைக்குத் தக்க வாறு பண்பும் மாறும். செல்வம் உயர்ந்திருந்தால் மனப் பண்பு உயர்ந்திருக்கும். எளியவரைக் கண் டால் இரக்கம் காட்டச் சொல்லும். மனதிலே தாராளம் இருக்கும். பேச்சிலே பெருமிதம் தோன் றும். எடுத்துக்காட்டாக, மாலைநேரம் ஒரு வாலிபன்