பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நிலையும் நினைப்பும் புரண்ட தமிழர்களுடைய நிலை எப்படி இருந்திருக் கும்? செல்வத்தில் புரண்ட தமிழர்களின் நினைப்பு முதலில் ஆரியர்களைக் கண்டதும் காபி கிளப்பை விட்டு உல்லாசமாக வெளிவந்த வாலிபனுடைய நினைப்பைப்போலவே இருந்தது. தமிழகத்திலே செல்வத்திற்கு என்ன குறைவு. கடலிலே முத்து, சுரங்கத்திலே தங்கம், காட்டிலே அகில், நஞ்சை புஞ்சை வெளிகளிலே நெற்களஞ்சியங்கள், பாசறைகளிலே போர்க் கருவிகள், கையிலே செல் வம், மனதிலே தாராளம்-இவ்வளவையும் பெற் றிருந்த தமிழர்கள் எளிய நிலையிலிருந்த ஆரியர் களைக் கண்டு இரக்கப்பட்டார்கள். தாராளமாக தனத்தை அள்ளி அள்ளி அவர்களுக்குக் கொடுத் தார்கள். தாங்கள் தரித்திரராகி விடுவோம் என் பதை மறந்தார்கள். அவர்கள் தத்துவங்கள். நினைப்புகள், நம்பிக்கைகள் ஆகியவைகளுடன் தமிழர்கள் நினைப்பு கலந்தால் என்னவாகும் தங் கள் தனிப்பண்பு என்பதைப் பற்றி அலட்சியமா யிருந்தார்கள்; கவலைப் படவில்லை. தொடர்ந்து நடந்து வந்தது. ஆரண்யங்களிலும், சாலை ஓரங்களிலும், கோபுர வாசலிலும் வாழ்ந்து வந்த ஆரியர்கள், மாட வீதிகளில் குடியேற ஆரம் பித்தார்கள். எங்கும் ஓமப்புகை, வேதொலி பரவி யது. தமிழர்களின் தனமும் குறைந்தது; தனிப் பண்பும் கெட்டது. பொரு தானம் கொஞ்சமாகக் குறையவும், கெடவும் ஏற்பட்ட ழுது முதல் இரண்டு தடவை பிச்சைக்காரனுக் குக் காசு கொடுப்பதால் பையிலுள்ள பணம் குறை