பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாத்துரை 25 தீரும். மூன்று அடுக்கு மேல்மாடியின் படிக்கட்டு 198. களைக் கட்டும் தொழிலாளி மனதிலே, தான் ஏழை யாக இருப்பதற்கும், மாடி வீட்டுக்குச் சொந்தக் காரன் பணக்காரனாயிருப்பதற்கும் "விதி தான்" காரணம் என்ற மூட நம்பிக்கை போகும் வரையில் அவன் பல மாடி வீடுகளை பிறருக்குக் கட்டிக் கொடுத்துவிட்டு 'தான் ஏன் அந்த மாடி வீடுகளில் ஒரு வீட்டின் உப்பரிகையில் உல்லாசமாக உலவக் கூடாது என்று நினைத்துப் பார்க்காமல் நினைத்துப் பார்க்கவும் நேரமில்லால், பகலெல்லாம் உழைத்து விட்டு இரவானதும், தன் குடிசைக்குள் குனிந்து செல்லுவான். மனதிலே இருந்த மூடநம்பிக்கைப் பகுத்தறிவுப் பகலவனைக் கண்டு மூடுபனிபோல நீங்க ஆரம்பித்த மறுகணமே, தொழிலாளி நினைக்க ஆரம்பித்துவிடுவான்: "தான் ஏன் மாடி வீட்டில் வாழக்கூடாது? பிறப்பில் ஒருவன் ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரனாகவும் ஏன் பிறக்கவேண் டும்? என்று தன் மனதைக் கேள்விகள் கேட்பான். அந்த நினைப்பின் வளர்ச்சியைத் தடைப்படுத்த யாராலும் முடியாது. ஆகையால் மக்கள் மனதிலே படிந்துள்ள மூட நம்பிக்கைகளை முதலில் அகற்றியாகவேண்டும். இந் நாட்டிலோ 100க்கு 96 பேர் படிக்காதவர்கள், படிக்காதவர்களா யிருந்தாலும் பரவாயில்லை. பாழும் இதிகாசப் புராணக் கருக்துக்களை பலமாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள். இது நல்ல நிலையா? இருக்கலாமா? இதை ஒழிக்க நாம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டோம். அரசாங் கம் அறியாமையையும் மூட நம்பிக்கைகளையும் 0-SNAN, N