பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாத்துரை 33 கட்டும் தொழிலாளி நிலை உயர்ந்திருந்தும் நினைப்பு உயராதிருந்ததற்கு, அவன் விதியின்பால்கொண்ட நம்பிக்கைக் காரணமாயிருப்பதைப்போல, இந்த நாடு நிலை உயர்ந்திருந்தும், நினைப்பு உயராததற்குக் காரணம் மூடநம்பிக்கை. நினைப்பு நிலை உயர்ந்த அளவுக்கு உயருவதற்கு ஒரே மார்க்கம், பகுத் தறிவைப் பரப்பவேண்டும். பாடத்திட்டத்திலே நான் முன்பு கூறியதுபோல, 'பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான ஒரு திட்டம் வகுக்கப்படாத வரையில், பகுத்தறிவும் பரவாது; நமது நினைப்பும் உயராது. ஆட் நமது நிலை உலக மன்றத்தின் முன்பு உயர்ந் திருக்கிறது. பிரான்சைவிட, இத்தாலியைவிட, கிரீசைவிட, ஜெர்மனியைவிட, ஸ்விட்ஸர்லாந்தை விட, கீழாகக் கருதப்பட்ட நாட்டிற்கு ஒரு பொழுதும் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்ற நிலை பெற்றிருந்த பெரும் சாம்ராஜ்யத்தைக் கொண் டிருந்த பிரிட்டிஷார் 150 வருடமாக ஆண்டுவிட்டுக் கடைசியில், மண்ணுக்குரிய மக்களிடம் சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும்பொழுதுக் கொடுக்கவேண்டிய கடன் எத்தனையோ கோடி ரூபாய்-என்றால் இந்தியாவின் நிலை வேறு எந்த நாடும் உயரமுடியாத அளவுக்கு, உயர்க் திருப்ப தாகவே பொருள். ஆனால் நிலை உயர்ந்திருந் தும், நினைப்பு உயரவில்லை. சப்மரினைப் பற்றி, டார்பிடோவைப் பற்றி, டெலிவிஷனைப்பற்றி, மின் சார யந்திரங்களைப் பற்றி. சந்திர மண்டலத்திற் குச் செல்லுவதுபற்றிய நினைப்பில்லாமல், இந்திய 3