பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நிலையும் நினைப்பும் காலத்தைப்பற்றி ரயில் எப்படி ஓடுகிறது என்பது பற்றி ஓடிக்கொண்டிருக்கிற ரயிலை ஒரு நொடியில் எப்படி எதிரே உள்ள கைப்பிடியால் நிறுத்தலாம் என்பதைப்பற்றி கூறுங்கள். ஜன்னல் வழியாக எதை யோ கவனித்துக்கொண்டு காதில் விழாதது போலவே இருப்பார். ஆனால் கொஞ்சநேரத்திற் கெல்லாம் ஜன்னல் வழியாக தெரியும் ஒரு குன்று. குன்றின் மேல் தெரியும் கோபுரம். கோபுரத்தின் மேல் தெரியும் விளக்கு. அவைகளைக் கவனித்துப் பார்ப்பார். உடனே பக்கத்திலுள்ளவரைப் பார்த் துக் கேட்பார்-தூங்கினாலும் தொடையைக் கிள் ளிக் கேட்பார்.-அது என்ன கோயிலுங்க ! விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பது போல் வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்றிருக்காது. நான் இதோ பேசுகிறேன்; என் முன் ஒலிபெருக்கி இருக்கிறது. அதுநான் பேசுவதைப் பெரிதாக்கி நாலாபக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும்படிச் செய்கிறது. அது எப்படி வேலைசெய்கிறது என்று கூறிப்பாருங்கள்; மேட்டூர் அணைக்கட்டை எப்படி கட்டியிருக்கிறார்கள் என்று கூறிப்பாருங்கள்; கப் பல் கனமாயிருந்தும் அது எப்படி கடலில் மிதக் கிறது என்று கூறிப்பாருங்கள், ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது என்று கூறிப்பாருங்கள்; அல் லது எந்த ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி யாவது கூறிப்பாருங்கள். ஆச்சரியமாகக் கேட்க மாட்டார்கள்; அவைகளில் அதிசய மிருப்பதாகவும் அவர்களுக்குத் தோன்றாது. அப்படிக் கொஞ்ச 'நேரம் கேட்டாலும் அதை மறுகணமே மறந்து